News August 12, 2024

பண்ருட்டியில் பரிசு வழங்கிய அமைச்சர்

image

முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு, கடலூர் மேற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி, பண்ருட்டி சட்டமன்ற தொகுதிக்கான மாபெரும் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி நெல்லிக்குப்பம் பகுதியில் கடந்த 3 நாளாக நடைபெற்று வந்தது. இறுதி நாளான இன்று விழுப்புரம் தளபதி சிசி அணியினரும் பண்ருட்டி அணியினரும் மோதினர். இதில் வெற்றி பெற்ற விழுப்புரம் அணிக்கு அமைச்சர் கணேசன் இன்று கோப்பை வழங்கினார்.

Similar News

News April 3, 2026

சிறுமியை காதலிக்க வற்புறுத்திய இளைஞர் மீது வழக்கு

image

பண்ருட்டி அருகே பி.என்.பாளையத்தை சேர்ந்தவர் மகேஷ்குமார் (23). இவர் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கும் 17 வயது மாணவியை கடந்த 3 மாதமாக பின்தொடர்ந்து சென்று, தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி உள்ளார். மேலும் மாணவி அணிந்திருந்த ஆடையை பிடித்து இழுத்தும், கையை பிடித்து இழுத்தும் தொந்தரவு செய்து மிரட்டி உள்ளார். இதுகுறித்து பண்ருட்டி மகளிர் போலீசார், மகேஷ்குமார் மீது வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.

News April 3, 2026

கடலூர்: ஒரே அழைப்பில் ஓடி வரும் லைன்மேன்!

image

தமிழகத்தில் கோடை காலம் தொடங்க உள்ளது. இதனால் இரவு நேரங்களில் திடீரென மின்தடை ஏற்பட்டால், நம்மில் பலருக்கு என்ன செய்வதென்று தெரியாது. இனி கவலை வேண்டாம்! நீங்கள் கடலூரில் எந்த பகுதியில் இருந்தாலும், ‘94987 94987’ என்ற TNEB Customer Care எண்ணை தொடர்புகொண்டு, உங்களது மின் இணைப்பு எண் மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிடத்தில் லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார்.

News April 3, 2026

அமைச்சர் எம்.ஆர். கே.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியீடு

image

அமைச்சர் பன்னீர்செல்வம் அறிக்கை வெளிட்டுள்ளார். அதில், முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகிற ஏப்.7ம் தேதி, கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் காட்டுமன்னார்கோயில், குறிஞ்சிப்பாடி, திட்டக்குடி உள்ளிட்ட 9 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார் என தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!