News January 30, 2026

பண்பொழி திருமலை கோவிலில் நாளை தேரோட்டம்

image

தைப்பூச திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் பண்பொழி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற திருமலை குமாரசாமி கோவிலில் ஜனவரி 31ம் தேதி காலை 9 மணிக்கு மேல் நடைபெறுகிறது. சிறப்பு அலங்காரத்தில் திருமலை குமரன் தேரில் எழுந்தருளி தேரோட்டம் விமர்சையாக நடைபெறுகிறது. ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் அருணாச்சலம் மற்றும் கோவில் நிர்வாகம் தரப்பில் செய்யப்பட்டு வருகிறது. *ஷேர் பண்ணுங்க

Similar News

News February 3, 2026

தென்காசி : இனி டாக்டர் பீஸ் FREE..!

image

தென்காசி மக்களே, FEES இல்லாம மருத்துவரை பார்க்க வழி இருக்கு. அரசின் eSanjeevani செயலியை இங்கு <>கிளிக்<<>> செய்து Install பண்ணுங்க. இதில் மருத்துவர்களிடம் வீடியோ காலில் காய்ச்சல், சளி, தலைவலி, கண்பார்வை, சுகர், பிரசர், கர்ப்பகால ஆலோசனைகள் வழங்கி முடிவில் டிஜிட்டல் மருத்து சீட் வழங்கப்படும். இதனால் உங்களுக்கு தேவையில்லாத செலவு குறையும். வீட்டில் இருந்தே தீர்வு. அருமையான தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க

News February 3, 2026

தென்காசியில் 2 உயிர்களை வேட்டையாடிய இருவர் கைது!

image

தென்காசி, செங்கோட்டை அருகே புளியரை வனப்பகுதியில் மான் வேட்டையாடி சமைத்துச் சாப்பிட்ட இருவரை வனத்துறையினர் கைது செய்தனர். ரகசியத் தகவலின் பேரில் அங்கு சென்ற அதிகாரிகள், கோபாலகிருஷ்ணன் மற்றும் முருகன் ஆகியோரைப் பிடித்தனர். தப்பியோடிய மற்றவர்களைத் தேடி வருகின்றனர். அவர்களிடமிருந்து மான் இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது. வனவிலங்குகளை வேட்டையாடுவது சட்டப்படி கடும் குற்றம் என வனத்துறை எச்சரிக்கை.

News February 3, 2026

தென்காசி காவல்துறையினருக்கு புத்தாக்க பயிற்சி

image

தென்காசி மாவட்ட காவல்துறையினருக்கு புத்தாக்க பயிற்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று தொடங்கியது. புத்தாக்க பயிற்சியானது மாவட்டத்திலுள்ள இரண்டாம் நிலை காவலர்கள் முதல் சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் வரை உள்ள அனைத்து காவல்துறையினருக்கும் 02.02.2026 இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாதவன் துவங்கி வைத்தார்.

error: Content is protected !!