News October 10, 2024
பண்பொழி கோயிலில் சுமங்கலி பூஜை

தென்காசி மாவட்டம் பண்பொழியில் அமைந்துள்ள அறம் வளர்த்த நாயகி நகரீஸ்வரர் கோயிலில் புரட்டாசி மாத நவராத்திரி பூஜை நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய நிகழ்வாக நாளை(அக்.,11) பதினோராம் தேதி சுமங்கலி பூஜை நடக்கிறது. இதனையொட்டி நாளை கும்ப பூஜை மகா அபிஷேகம், 108 சுமங்கலி பூஜை, தம்பதி பூஜை நடக்கிறது. 108 பெண்கள் கோயிலில் முன்பதிவு செய்து கொண்டு கலந்து கொள்ளலாம் என இன்று அறிவிக்கப்பட்டது. SHARE IT.
Similar News
News December 12, 2025
தென்காசி: உங்க நிலத்தை காணவில்லையா? இத பண்ணுங்க..

தென்காசி மக்களே நீங்கள் வாங்கிய நிலங்கள் (அ) உங்க அப்பா, தாத்தா வாங்கிய பழைய நிலங்களின் பத்திரம் இருக்கு ஆனால் நிலம் எங்கே இருக்குன்னு தெரியலையா? சர்வேயர்க்கு காசு கொடுக்க யோசீக்கிறீங்களா? உங்க நிலங்களை கண்டுபிடிக்க EASYயான வழி. <
News December 12, 2025
தென்காசி மக்களே., நாளை முகாம்! கலெக்டர் தகவல்!

பாவூா்சத்திரம் ஒளவையாா் அரசு பெண்கள் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ சேவை முகாம் நாளை (டிச.13) காலை நடைபெறுகிறது. இதுதொடா்பாக கலெக்டர் கமல்கிஷோா் வெளியிட்ட செய்திக்குறிப்பில், இந்த முகாமில் பொது மருத்துவம், அறுவை சிகிச்சை, எலும்பியல், மகப்பேறு, மகளிா் நலம், குழந்தைகள் நலம், இதயவியல், இயன்முறை போன்ற பல்வேறு துறைகள் சாா்பில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, ஆலோசனைகள் வழங்கப்படும். SHARE
News December 12, 2025
தென்காசி : மகனுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை

சுரண்டை அருகே சாம்பவர்வடகரையை சேர்ந்தவர் உமா (31) இவரது கணவர் கோவிந்தராஜ் வெளியில் கடன் வாங்கிவிட்டு பிரிந்து சென்றார். இவருக்கு தர்ஷிக் முகுந்த் (9) என்ற மகன் உள்ளார். கடன் தொல்லையால் இவர் சில தினங்கள் முன்பு தன் மகனுக்கு விஷம் கொடுத்து தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதில் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உமா உயிரிழந்துளளார். இதுகுறித்து சாம்பவர்வடகரை போலீசார் விசாரணை.


