News January 12, 2026

பண்டிகை முடிந்து பொங்கல் பரிசு: புதுச்சேரி அரசு

image

பொங்கல் பண்டிகைக்கு பின் பொங்கல் பரிசுத் தொகை ₹3,000 மக்களின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. பொங்கல் பரிசாக ₹4,000 வழங்கப்படும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது நிதிச்சுமை காரணமாக பொங்கல் பரிசுத்தொகை ₹3,000-ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி பண்டிகைக்கு பின் பொங்கல் பரிசு, ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News February 1, 2026

பட்ஜெட்டில் TN கேட்ட இந்த விஷயம் இல்லை

image

மாநிலங்களுக்கான நிதிப் பகிர்வை 41%-ல் இருந்து 50%ஆக உயர்த்த வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை வைத்திருந்தது. இந்நிலையில், இதனை ஏற்காத மத்திய அரசு, நிதிப் பகிர்வு விகிதம் 41%ஆக தொடரும் என மத்திய பட்ஜெட்டில் அறிவித்துள்ளது. இதனால் திட்டங்களை நிறைவேற்றுவதில் மாநில அரசின் மீதான நிதிச்சுமை அதிகரிக்கும் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.

News February 1, 2026

ஏப்ரல் 1-ல் புதிய வருமான வரிச்சட்டம் அமல்

image

புதிய வருமான வரிச்சட்டம் வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என பட்ஜெட்டில் அறிவிக்கபட்டுள்ளது. மேலும் வருமான வரி தாக்கல் செய்யப்படும் முறை எளிதாக்கப்படும் என்றும் ITR1, ITR 2 தாக்கலுக்கான அவகாசம் நீட்டிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வாகன விபத்துக்கான இழப்பீட்டுக்கு வரி விலக்கு அளிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

News February 1, 2026

இவற்றுக்கெல்லாம் வரி இல்லை.. நிர்மலா அறிவித்தார்

image

➤தரவு மையங்கள், கிளவுட் நிறுவனங்களுக்கு 2047-ம் ஆண்டு வரை முழு வரி விலக்கு அளிக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. ➤விபத்து காப்பீட்டு தொகைக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது ➤மூலதனப் பொருட்களின் சுங்க உற்பத்திக்கு வரி இல்லை. ➤காலணிகள் ஏற்றுமதி செய்வோர் மூலப்பொருட்களை வரி இல்லாமல் இறக்குமதி செய்யலாம் ➤லித்தியம் பேட்டரிக்கு இறக்குமதி வரி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!