News April 9, 2025
பண்டிகை கால சிறப்பு ரயில்கள் இயக்கம்

தமிழ் புத்தாண்டு, புனித வெள்ளி உள்ளிட்ட நாட்களையொட்டி சிறப்பு ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி சென்னை சென்ட்ரல் கன்னியாகுமரி சிறப்பு ரயில் சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10 மணியளவில் கன்னியாகுமரி சென்று சேரும். இது 10, 17 ஆகிய நாட்களில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Similar News
News April 18, 2025
மதுரை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

மதுரை மாவட்டத்தில் இன்று (17.04.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News April 17, 2025
மதுரை : கஞ்சா கடத்தியவருக்கு 12 ஆண்டு சிறை

திண்டுக்கல் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் காரில் சுமார் 150 கிலோ கஞ்சாவை கடந்த 2017 ஆம் ஆண்டு கடத்தி வந்ததாக மதுரை மாவட்ட போதை பொருள் தடுப்பு சிறப்பு பிரிவு போலீசார் சசிகுமார் என்பவரை கைது செய்தனர். இந்த வழக்கில் அவருக்கு 12 ஆண்டுகள் சிறையும் ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்து மதுரை மாவட்ட போதை பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
News April 17, 2025
மதுரையில் டூவீலர், கார் ஏலம்

மதுரையில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 305 பைக்கள், 11 மூன்று சக்கர வாகனங்கள், ஒரு கார் ஆயுதப்படையில் ஏப்.25ல் ஏலம் விடப்படுகிறது. விரும்புவோர் ஏப்.23 காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை முன்பணம் செலுத்தி ரசீது பெறவேண்டும். வாகனங்களை ஏப்.22, 23, 24ல் நேரில் பார்வையிடலாம். விவரங்களுக்கு 9498179176, 9498179294ல் தொடர்பு கொள்ளலாம். பைக் வாங்க நினைக்கு உங்க நண்பர்களுக்கு SHARE செய்து உதவவும்.