News January 23, 2026

பணி நியமன ஆணைகளை வழங்கிய ஆட்சியர்

image

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்டு குரூப்-4 தேர்வில் இளநிலை வருவாய் ஆய்வாளர் தேர்ச்சிப் பெற்றனர். கள்ளக்குறிச்சி
மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இளநிலை வருவாய் ஆய்வாளர்களுக்கான பணி நியமன ஆணைகளை
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த்,
இன்று (ஜன.23) வழங்கினார்.

Similar News

News January 31, 2026

கள்ளக்குறிச்சி: ஆடு, மாடு வளர்க்க ரூ.50 லட்சம் வரை மானியம்!

image

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் <>இங்கு கிளிக் <<>>செய்து அதற்கான தகுதிகளை அறிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News January 31, 2026

கள்ளக்குறிச்சியில் வாகனங்கள் பொது ஏலம்!

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கஞ்சா வழக்கில் கைப்பற்றப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட ஒரு நான்கு சக்கர வாகனம், 26 இருசக்கர வாகனம் என 27 வாகனங்கள் வரும் பிப்ரவரி 7-ஆம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்ட ஆயுதப்படை அலுவலக வளாகத்தில் பொது ஏலத்தில் விடப்பட உள்ளது. வாகனங்களை ஏலம் நடைபெறும் பிப்ரவரி 7-ஆம் தேதி காலை 8 மணி முதல் பார்வையிடலாம் என்றும் மாவட்ட எஸ்.பி அறிவித்துள்ளார்.

News January 31, 2026

கள்ளக்குறிச்சி: ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலி

image

திருக்கோவிலூர் அருகே ஆடூர்கொளப்பாக்கத்தைச் சேர்ந்த சந்தோஷ் (19), கடந்த 27-ம் தேதி இரவு நண்பரை வீட்டில் விட்டுவிட்டு இருசக்கர வாகனத்தில் திரும்பிக்கொண்டிருந்தார். சுந்தரேசபுரம் மேட்டு காலனி அருகே சென்றபோது, முன்னால் சென்ற டிராக்டரை முந்த முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக டிராக்டரின் பின்பகுதியில் பைக் மோதியதில், சந்தோஷ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.

error: Content is protected !!