News August 25, 2024

பணியாளரை மிரட்டிய காங்கிரஸ் வட்டார தலைவர் கைது

image

ஶ்ரீவில்லிபுத்தூர் இந்திரா நகரை சேர்ந்த முருகராஜ்(52) என்பவர் ஸ்ரீவி வடக்கு வட்டார காங்கிரஸ் தலைவராக உள்ளார். இவர் ஶ்ரீவி அருகே தட்டாங்குளப்பட்டியில் உள்ள ரேசன் கடைக்கு சென்று பொருட்கள் கேட்டு விற்பனையாளர் நாகராஜன்(50) என்பவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து நாகராஜன் அளித்த புகாரில் ஶ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸார் அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக முருகராஜை கைது செய்தனர்.

Similar News

News March 3, 2026

ராஜபாளையத்தில் மீண்டும் போட்டியிட திமுக MLA விருப்பம்

image

சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு முன்னிலையில் இராஜபாளையம் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் தேர்தலில் போட்டியிட விருப்பமனு கொடுத்துள்ளார். உடன் திமுக நகரச் செயலாளர் ராமமூர்த்தி, மணிகண்ட ராஜா, திமுக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

News March 3, 2026

சிவகாசி அருகே வாலிபர் தீக்குளித்து தற்கொலை

image

சிவகாசி அருகே சித்தமநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் மாரீஸ்வரன் (32). திருமணமான இவருக்கு 2 பெண்குழந்தைகள் உள்ளனர். இவரது குடி பழக்கத்தால் சில தினங்களுக்கு முன் தகராறு எழுந்துள்ளது. இதனால் அவர் மனைவி, குழந்தைகளுடன் தனது தாயார் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் மனமுடைந்த மாரீஸ்வரன், தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொண்டார். அவர் விருதுநகர் G.H-ல் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார்.

News March 3, 2026

விருதுநகர் மாவட்ட மக்களுக்கு முக்கிய அப்டேட்

image

விருதுநகர் மக்களே குழந்தை பிறந்து 12 மாதங்களுக்குள் பெயருடன் இலவசமாக பிறப்பு சான்று பதிவு செய்யலாம். 12 மாதங்களுக்கு பின் 15 ஆண்டுகளுக்குள் ரூ.200 கட்டணம் செலுத்தி பதிவு செய்யலாம். அவ்வாறு பெயருடன் பதிவு செய்ய செப்.26 கடைசி தேதி என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. நகராட்சி, தாலுகா, பேரூராட்சி அலுவலங்கள், அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார மையங்கள் உள்ளிட்ட இடங்களில் நேரில் அணுக அறிவுறுத்தப்பட்டுள்ளது

error: Content is protected !!