News April 5, 2025
பணம் இரட்டிப்பு மோசடி: போலீசார் எச்சரிக்கை!

சேலம் அம்மாப்பேட்டையில் அன்னை தெரசா மனிதநேய அறக்கட்டளை என்ற பெயரில், பொது மக்களிடம் பணம் இரட்டிப்பு செய்து தருவதாக மோசடியில் ஈடுபட்டு 4 பேர் கைதான நிலையில், பணம் கட்டியவர்களுக்கு திருப்பி தருவதாக வாட்ஸப் மூலம் ஏஜெண்டுக்கள் பரப்பி வரும் தகவல்களை நம்ப வேண்டாம் எனவும், இது குற்றவாளிகளுக்கு சாதகமாக திருப்ப செய்யும் சூழ்ச்சி எனவும் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Similar News
News August 5, 2025
சேலம்: வியாபாரியிடம் ரூ.7 லட்சம் MLM மோசடி

சேலம்: கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவர், தள்ளு வண்டியில் கூல்ட்ரிங்ஸ் கடை நடத்தி வருகிறார். இவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட சுரேஷ் என்பவர் ஆன்லைன் MLM-யில் முதலீடு செய்தால் அதிக பணம் கிடைக்கும் எனக் கூறியுள்ளார். இதனையடுத்து, அவரது வங்கி கணக்கிற்கு தவணை முறையில் 11,65,000 முதலீடு செய்தார். மீதி பணத்தை வழங்காத நிலையில் சைபர் கிரைம் போலீசில் அளித்த புகாரில் சுரேஷை கைது செய்தனர்.
News August 5, 2025
சேலம்: மத்திய அரசு வேலை வேண்டுமா?

சேலம் மக்களே.., 10ஆவது முடித்தால் எல்லை பாதுகாப்புப் படையில் Constable(Tradesman), carpenter, plumber, painter, electrician,cook, Tailor உள்ளிட்ட பல பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு 10ஆவதி, ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ரூ.21,700 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு ஆக.25ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க இங்கே <
News August 5, 2025
சேலம்: விருதிற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

சேலம் மாவட்டத்தில் செயல்படும் குழந்தைகள் பராமரிப்பு நிறுவனத்திற்கான அறிவிப்பு முன்மாதிரியான சேவை விருது பெற விண்ணப்பிப்பதற்கு இன்று(ஆக.5) மாலையுடன் கால அவகாசம் நிறைவு பெறுகிறது. தகுதி வாய்ந்த நிறுவனங்கள் விருதுகள் பெற விரும்பினால் உடனடியாக தங்களுடைய அனைத்து ஆவணங்களையும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் சமர்ப்பிக்க ஆட்சியர் வலியுறுத்தியுள்ளார்.