News January 8, 2026

பணமில்லையா? மனமில்லையா? நயினார்

image

போராட்டத்தில் ஈடுபடும் இடைநிலை ஆசிரியர்களுக்கு <<18791380>>ஊதியம்<<>> வழங்கப்படாது என்ற அறிவிப்புக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். திமுக அரசு வாக்குறுதியை வீசி எறிந்ததோடு, ஊதியத்தையும் வழங்காமல் ஆசிரியர்களின் வாழ்வை பறிப்பது அராஜகமானது என்று அவர் சாடியுள்ளார். ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ விழா நடத்தும் திமுக அரசுக்கு, சம ஊதியம் வழங்க பணமில்லையா (அ) மனமில்லையா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Similar News

News February 2, 2026

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: ஊக்கமுடைமை ▶குறள் எண்: 599 ▶குறள்: பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை
வெரூஉம் புலிதாக் குறின்.
▶பொருள்: யானை பெரிய உடம்பையும் கூர்மையான கொம்பினையும் உடையது என்றாலும் புலி தாக்கினால் பயப்படும்.

News February 2, 2026

மத்திய பட்ஜெட்டில் இதற்கு ₹10,000 கோடி

image

இந்தியாவை ஓர் உலகளாவிய உயிர்காக்கும் மருந்துகளை உற்பத்தி செய்யும் மையமாக மேம்படுத்த ‘பயோ ஃபார்மா சக்தி’ திட்டத்தை FM நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் முன்மொழிந்தார். இத்திட்டத்திற்கு அடுத்த 5 ஆண்டுகளில் ₹10,000 கோடி நிதி ஒதுக்கப்படும். இதன் மூலம், விலை உயர்ந்த மருந்துகள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படுவதுடன், அவை பொதுமக்களுக்கு குறைந்த விலையிலேயே கிடைக்க வழிவகை செய்யப்படும்.

News February 2, 2026

ஜிஎஸ்டி வசூல் ₹1.93 லட்சம் கோடி

image

கடந்த ஜனவரி மாதத்தில் நாட்டின் மொத்த ஜிஎஸ்டி ₹1.93 லட்சம் கோடி வசூல் ஆகியுள்ளதாக மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது. 2025 ஆண்டு ஜனவரி மாதம் ₹1.84 லட்சம் கோடியாக இருந்த ஜிஎஸ்டி வசூல் இந்தாண்டு 6.2% அதிகரித்துள்ளது. இதில் உள்நாட்டு ஜிஎஸ்டி வருவாய் ₹1.41 லட்சம் கோடி என்றும், தமிழகத்தில் ஜிஎஸ்டி வசூல் 5% உயர்ந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!