News December 9, 2025
பணக்காரர் வன்கொடுமை செய்தால் குற்றமற்றவரா?

<<18502901>>நடிகை பலாத்கார வழக்கில்<<>> கேரள அரசின் செயல்பாட்டை பாடகி சின்மயி வரவேற்றுள்ளார். குற்றவாளிக்கு அடைக்கலம் கொடுத்து, அவர்களை ஜாமினில் வெளியேற்ற முயற்சிப்பதற்கு பதிலாக கேரள அரசு மேல்முறையீடு செய்ய உள்ளது பாராட்டத்தக்கது. ஒருவர் பணக்காரராக இருந்தால், தனக்கு பிடிக்காத பெண்ணை, அடியாட்களை அனுப்பி வன்கொடுமை செய்துவிட்டு, குற்றமற்றவர் என நீதி வாங்கி விட முடிவதாகவும் வேதனை தெரிவித்துள்ளார்.
Similar News
News December 10, 2025
PM மோடியை எப்போது சந்திக்கிறார் மெஸ்ஸி?

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி 3 நாள் பயணமாக டிச.13 அன்று கொல்கத்தா வருகிறார். தனது சிலையை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றபின், மதியம் 2 மணிக்கு ஹைதராபாத்துக்கு செல்கிறார். அங்கு, இரவு 7 மணிக்கு நடக்கும் நட்பு போட்டியில் பங்கேற்கிறார். இதனையடுத்து 2-வது நாள் மும்பையில் நடக்கும் பேஷன் ஷோவில் பங்கேற்கவுள்ளார். இறுதியாக டிச.15 டெல்லிக்கு சென்று PM மோடியை அவரது இல்லத்தில் சந்திக்கவுள்ளார்.
News December 10, 2025
டிஜிட்டல் முறைக்கு மாறும் அரசியல் கட்சிகள்

அதிமுகவின் பொதுக்குழு & செயற்குழு கூட்டம் இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவிருக்கிறது. இந்நிலையில், கூட்டத்தில் நடப்பவை பற்றி தெரிந்து கொள்ள Whatsapp சேனல் ஒன்று உருவாக்கப்பட்டு, அதற்கான QR Code பதாகை முகப்பில் வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, தவெக பொதுக்கூட்டத்துக்கு QR Code மூலம் அனுமதி வழங்கப்பட்ட நிலையில், அதிமுக கூட்டத்துக்கு இப்படி ஒரு முன்னேற்பாடு செய்யப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
News December 10, 2025
BREAKING: தங்கம் விலை தடாலடியாக மாறியுள்ளது

ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதால், நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹240 உயர்ந்து ₹96,240-க்கும், கிராமுக்கு ₹30 உயர்ந்து ₹12,030-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக, கடந்த 10 நாள்களுக்கும் மேல் ஆபரணத் தங்கத்தின் விலை ₹96 ஆயிரத்திற்கும் கீழ் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


