News April 7, 2026
பட்னாவிஸ் வெட்கப்பட வேண்டும்: ஸ்டாலின்

பாஜக MLA-வைத் தேர்ந்தெடுத்தால்தான் மதுரைக்கு மெட்ரோ தருவோம் என்று பேரம் பேசுவதும், பிளாக்மெயில் செய்வதும்தான் MH CM-ன் வேலையா என்று ஸ்டாலின் கேட்டுள்ளார். இதுதொடர்பான X பதிவில், எதிர்க்கட்சி ஆளும் மாநிலத்தில் வந்து இப்படி பேசுவதற்கு அவர் வெட்கப்பட வேண்டும் என சாடியுள்ளார். மேலும், திராவிட மாடல் ஆளும் தமிழகத்தில்தான் Double Digit பொருளாதார வளர்ச்சி உள்ளது என்பது நினைவில் இருக்கட்டும் என கூறினார்.
Similar News
News April 11, 2026
சேலம்: 10th போதும்.. CRPF-ல் வேலை

1) மொத்த காலிப்பணியிடங்கள்: 9,195
2) சம்பளம்: ரூ. 21,700 – ரூ. 69,100
3) கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சி.
4) வயது: 21 முதல் 27 வயது வரை.
5) தேர்வு செய்யப்படும் முறை: CBT, PST/PETT, rade Test
6) விண்ணப்பிக்க தொடங்கும் நாள்: ஏப்.20, 2026
7) கடைசி நாள்: மே 19, 2026
8) அதிகாரப்பூர்வ இணையதளம்: <
News April 11, 2026
இந்தியாவுக்கு கிடைத்த 4 தங்கமகள்கள்

மங்கோலியாவில் நடைபெற்ற ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் 5 தங்கப் பதக்கங்களை இந்தியா தன்வசப்படுத்தியுள்ளது. மீனாட்சி (48 kg), பிரீத்தி (54 kg), பிரியா (60 kg) & அருந்ததி (70 kg) ஆகிய 4 வீராங்கனைகள் தங்கப் பதக்கங்களை கைப்பற்றினர். 50 kg ஆடவர் பிரிவில் விஷ்வாந்த் சுரேஷ், ஜப்பானின் டைச்சி இவாயியை 5:0 என்ற கணக்கில் தோற்கடித்து தங்கம் வென்றுள்ளார். பதக்கப்பட்டியலில் இந்தியா 2-ம் இடத்தில் உள்ளது.
News April 11, 2026
கூட்டணியில் மரியாதை இல்லை: மாணிக்கம் தாகூர்

மாணிக்கம் தாகூர், மீண்டும் தன் பேச்சால் கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளார். மதுரையில் காங்., நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அவர், கூட்டணிக்கு நம்மை அழைக்கவில்லை; மரியாதையும் இல்லை, நிர்வாகிகள் அனைவரும் கனத்த இதயத்துடன் உள்ளனர் என்றார். இருப்பினும், ஏப்.23 வரை இவை அனைத்தையும் புறந்தள்ளிவிட்டு, வெற்றிக்காக பாடுபடுங்கள் என்றும் கட்சியினரை அறிவுறுத்தியுள்ளார்.


