News May 16, 2024
பட்டுக்கோட்டையில் 16 செ.மீ மழை

தமிழக பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி காரணமாக தஞ்சை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தஞ்சை மாவட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டையில் 16 செ.மீ மழை பதிவாகியுள்ளது. மேலும், டெல்டா மாவட்டங்களில் விடிய விடிய மழை பெய்து வருகிறது.
Similar News
News December 17, 2025
தஞ்சை: ஒரே நாளில் 3 வீடுகளில் திருட்டு!

கபிஸ்தலம் பட்டவர்த்தியில் வெங்கடேசன், மணிகண்டன், சைபுனிஷா ஆகியோரின் வீடுகளில் கதவை உடைத்து நகை மற்றும் பணம் திருடப்பட்டுள்ளது. வெங்கடேசன் வீட்டில் 2 பவுன் நகை, 100 கிராம் வெள்ளி திருடு போனது. அதே போல் மணிகண்டன் வீட்டில் 3.5 பவுன் நகைகள், ரூ.30 ஆயிரம் ரொக்கமும், சைபுனிஷா வீட்டில் ரூ. 40 ஆயிரம் ரொக்கம், வெள்ளிக் கொலுசுகளும் திருடு போயுள்ளன. இதைத்தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News December 17, 2025
தஞ்சை: கிரேன் மோதி பரிதாப பலி!

ஒரத்தநாட்டைச் சேர்ந்தவர் ஏலம்பாள் (75), இவர் நேற்று காலை வீட்டில் இருந்து நடந்து கடைக்கு சென்று உள்ளார். அப்போது ரோட்டை கடந்து சென்றபோது, தஞ்சையில் இருந்து ஓரத்தநாட்டிற்கு மின்சார பணிக்காக வரவழைக்கப்பட்ட கிரேன் எதிர்பாராதவிதமாக ஏலம்பாள் மீது மோதியது. இதில் காயமடைந்த அவரை தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கபட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
News December 17, 2025
தஞ்சை: சிகிச்சைக்கு செல்லும் வழியில் மூச்சு திணறி பலி

பாபநாசம் அருகே தென்னஞ்சோலை பகுதியைச் சேர்ந்த ஜீவானந்தம், உடல்நிலை பாதிக்கப்பட்ட தனது மனைவி குணவதியை சிகிச்சைக்காக காரில் அழைத்து செல்லும் வழியில் மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் பாபநாசம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில், மேல் சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் காரிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.


