News March 21, 2026
பட்டியலே வெளியாகல.. வாக்கு வேட்டையில் செங்கோட்டையன்

இன்னும் வேட்பாளர் நேர்காணலையே தவெக முடிக்காத முன்பே, செங்கோட்டையன் தனக்கு வாக்களிக்குமாறு கோபி தொகுதியில் பிரசாரத்தை தொடங்கிவிட்டார். கோபியில் தொடர்ந்து 10-வது முறையாக போட்டியிடும் தனக்கு ஆதரவளிக்க வேண்டும் என வணிகர் சங்கங்கள் உள்ளிட்ட அமைப்புகளிடம் அவர் ஆதரவு திரட்டி வருகிறார். அவருக்கு ஆதரவாக தவெகவின் சத்தியபாமாவும் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
Similar News
News April 8, 2026
WhatsApp-ன் அசத்தலான அப்டேட்

Instagram-yiல் இருப்பது போல இனி WhatsApp-லும் நமக்கென Username வைத்துக்கொள்ளும் ஆப்ஷன் ஜூன் மாதத்தில் அறிமுகமாக உள்ளது. இனி மற்றவர்களுடன் சாட் செய்ய மொபைல் எண்ணை பகிர்வதற்கு பதிலாக, இந்த Username-ஐ பகிர்ந்தால் போதும். இதன்மூலம், உங்கள் மொபைல் எண்ணை மற்றவர்கள் பார்வையில் இருந்து மறைத்து விடலாம். பயனர்களின் தனியுரிமை, பாதுகாப்பு கருதி இந்த அம்சம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
News April 8, 2026
மாட்டிறைச்சியை வீட்டிற்குள் சாப்பிடுங்கள்: அசாம் CM

அசாமில் மாட்டிறைச்சிக்கு தடையில்லை என்று அம்மாநில CM ஹிமந்த பிஸ்வா சர்மா விளக்கம் அளித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், வீட்டில் முஸ்லிம்கள் மாட்டுக்கறி உண்பதை நான் தடுக்கவில்லை. பொதுவெளியில் உண்பதை தவிருங்கள் என்று மட்டுமே கூறினேன் என்றார். மேலும், கோயில்கள், சத்திரங்களுக்கு 5 கிமீ சுற்றுவட்டாரத்தில் உள்ள உணவகங்களில் மாட்டிறைச்சி விற்பதற்கும் உண்பதற்கும் தடை உள்ளதை அவர் குறிப்பிட்டார்.
News April 8, 2026
ரேஷன் கார்டுக்கு ₹10,000.. EPS வாக்குறுதி அளித்தார்

இல்லத்தரசிகளுக்கு ₹8,000 கூப்பன் வழங்கப்படும் என்ற திமுகவின் வாக்குறுதியை பரப்புரை மேடைகளில் தொடர்ந்து ஸ்டாலின் முன்னிறுத்தி வருகிறார். இதற்கு எதிர்வினையாக, ரேஷன் கார்டுக்கு ₹10,000 வழங்கப்படும் என்ற வாக்குறுதியை EPS கையில் எடுத்துள்ளார். அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் ரேஷன் அட்டைதாரர்கள் அனைவரின் வங்கிக் கணக்கிலும் ₹10,000 வழங்கப்படும் என அவர் அறிவித்துள்ளார். இதை எப்படி பார்க்குறீங்க?


