News August 16, 2024

பட்டியலின, பழங்குடியின மாணவர்களுக்கு உதவித்தொகை

image

கனரா வங்கியின் கோவை மண்டல அலுவலகத்தின் சாா்பில் சிறந்த பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவிகள் 126 பேருக்கு வித்யா ஜோதி திட்டத்தின்கீழ் ரூ.5.04 லட்சம் உதவி தொகை நேற்று வழங்கப்பட்டது. இதனை கோவை மாவட்ட தாட்கோ மேலாளா் மகேஸ்வரி வழங்கினார். அப்போது, மண்டல தலைவா் ரதீஷ் சந்திர ஜா, கோட்ட மேலாளா்கள் நஞ்சுண்டா, ஸ்ரீதா் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் உட்பட பலர் உடன் இருந்தனர்.

Similar News

News September 18, 2025

கோவை: பயிற்சியுடன் ரூ.12,000 வேண்டுமா?

image

கோவை மக்களே, எல்ஐசி வீட்டு நிதி நிறுவனத்தில் (LIC Housing Finance) தொழிற்பயிற்சி அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாதம் ரூ.12,000 உதவித்தொகையுடன் 12 மாதங்களுக்கு கோவையிலுள்ள அலுவலகங்களிலேயே பயிற்சி அளிக்கப்படகிறது. இதற்கு ஏதேனும் ஒரு பாடப்பிரிவுகளில் பட்டப்படிப்பு பெற்றிருக்க வேண்டும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக் <<>>பண்ணுங்க. கடைசி தேதி 22.09.2025 ஆகும். SHARE பண்ணுங்க!

News September 18, 2025

கோவை: தற்போது வரை 57 பேர் பலி: அதிர்ச்சி தகவல்

image

கோவை மாநகரில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் வரை 251 விபத்துகளில், 62 இளைஞர்கள் பலியாகினர். இந்த நிலையில் நடப்பாண்டில் ஜனவரி முதல் தற்போது வரை 207 விபத்துக்கள் நடந்து, அதில் 57 இளைஞர்கள் பலியாகி உள்ளனர். மேலும், இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை ஓட்டிய 11 சிறுவர்களின் பெற்றோர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கோவை மாநகர காவல் துறை அதிர்ச்சி தகவலை அளித்துள்ளது.

News September 18, 2025

இஸ்ரோ தலைவர் கோவையில் பேட்டி

image

கோவை விமான நிலையத்தில் இஸ்ரோ தலைவர் நாராயணன், ககன்யான் திட்டத்தில் 85% சோதனைகள் நிறைவு பெற்றுள்ளதை தெரிவித்தார். டிசம்பரில் ஆளில்லா ராக்கெட் வயோமித்ராவுடன் ஏவப்படும் என்றும், 2027 மார்சில் மனிதர்கள் அனுப்பப்படுவார்கள் என்றார். மேலும் சந்திரயான்-4 திட்டத்தில் நிலவில் மாதிரிகளை சேகரிக்க, AI ரோபோ தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என்றும் குறிப்பிட்டார்.

error: Content is protected !!