News February 6, 2026

‘பட்டியலினத்தவர் மீது திமுகவுக்கு அக்கறையில்லை’

image

புதுக்கோட்டை சமூகநீதி விடுதிகளில் முறையான உணவு வழங்காததை கண்டித்து மாணவர்கள் போராட்டம் நடத்தியது அதிர்ச்சியளிப்பதாக அன்புமணி கூறியுள்ளார். தனது X பதிவில், உணவு வழங்குவதற்கான தொகையை அதிகாரத்தில் இருப்பவர்கள் சுரண்டிவிடுவதால் மாணவர்கள் வெறும் சோறு, ஊறுகாய் மட்டுமே சாப்பிடுவதாக தெரிவித்துள்ளார். மேலும் பட்டியலினத்தவர் நலனில் அக்கறையில்லாத திமுக அரசை மக்கள் தூக்கி எறிவார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

Similar News

News February 14, 2026

பிப்ரவரி 14: வரலாற்றில் இன்று

image

*1924 – ஐபிஎம் (IBM) நிறுவனம் அமைக்கப்பட்டது.
*1998 – கோயம்புத்தூர் நகரின் பல இடங்களில் குண்டுகள் வெடித்ததில் 58 பேர் கொல்லப்பட்டனர்.
*2019 – புல்வாமா தாக்குதல் நடத்தப்பட்ட நாள்
*1483 – முகலாயப் பேரரசர் பாபர் பிறந்த தினம்
* 1952 – சுஷ்மா சுவராஜ் பிறந்த தினம்
* காதலர் தினம்

News February 14, 2026

சவப்பெட்டியோடு TVK கூட்டத்திற்கு போகணும்: ADMK

image

சேலம் தவெக கூட்டத்தில் ஒருவர் உயிரிழந்ததை எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அந்த வகையில், அதிமுகவின் செய்தி தொடர்பாளர் கோவை சத்யன், தவெக கூட்டத்திற்கு செல்வதாக இருந்தால், இனிமேல் சவப்பெட்டியோடு தான் செல்ல வேண்டும் என காட்டமாக கூறியிருக்கிறார். ஏற்கெனவே, த்ரிஷாவிடம் இருந்து விஜய் வெளியே வரவேண்டும் என நயினார் கூறியிருந்த நிலையில், கோவை சத்யனின் பேச்சும் சர்ச்சையாகியுள்ளது.

News February 14, 2026

கொள்ளையடிக்க துடிக்கும் திமுக: சீமான்

image

மகளிர் உரிமைத் தொகை என்ற பெயரில் ₹5000 கொடுத்து, அடுத்த ஐந்தாண்டுகள் கொள்ளையடிக்க திமுகவினர் துடிக்கின்றனர் என்று சீமான் விமர்சித்துள்ளார். தேர்தல் வருவதை கணக்கிட்டு, மக்களின் ஓட்டை பறிக்கும் சூழ்ச்சியை நேர்த்தியாக செய்துள்ள திமுக, சட்டம்-ஒழுங்கை காப்பதில் காட்டவில்லை என சாடினார். மேலும், திமுகவின் ஓட்டு பறிக்கும் திருட்டுத்தனத்திற்கு 2026-ல் மக்கள் பாடம் புகட்டுவார்கள் எனவும் எச்சரித்துள்ளார்.

error: Content is protected !!