News April 17, 2024
பட்டா வழங்காததை கண்டித்து தேர்தல் புறக்கணிப்பு

நாகை அருகே தென்மருதூரில் மூன்று தலைமுறைகளாக 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களுக்கு பட்டா வழங்க பலமுறை மனு அளித்துள்ளனர். அதற்கு உரிய நடவடிக்கை எடுக்காததால் தேர்தலை புறக்கணிக்க போவதாக அதிரடி முடிவெடுத்து பூத் ஸ்லிப்பை வாங்க மறுத்து கோஷங்கள் எழுப்பி நேற்று போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Similar News
News September 26, 2025
நாகை: வியாபாரிகளுக்கு கடும் எச்சரிக்கை

நாகை மாவட்டம் முழுவதும் குறுவை பருவத்துக்காக 95 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளுக்கு மட்டுமே முன்னுரிமை அளித்து நெல் கொள்முதல் செய்யப்பட வேண்டும் என்றும், வெளி மாவட்ட நெல்கள் வியாபாரிகள் மூலம் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் ஆகாஷ் எச்சரித்துள்ளார். SHARE NOW!
News September 26, 2025
நாகையில் சைக்கிள் போட்டி: கலெக்டர் அறிவிப்பு

நாகையில் அண்ணா பிறந்த நாளை கொண்டாடும் வகையில், பள்ளி மாணவர்களுக்கான சைக்கிள் போட்டிகள் நாளை நடத்தப்பட உள்ளது. வயது அடிப்படையில் பல்வேறு பிரிவுகளாக நடைபெறும் இந்த போட்டியில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகள் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்குள் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு ரொக்கப் பரிசும், சான்றிதழும் வழங்கப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
News September 26, 2025
நாகையில் நெடுந்தூர ஓட்ட போட்டி

தமிழக முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு, அறிஞர் அண்ணா மரத்தான் போட்டிக்கு இணையான நெடுந்தூர ஓட்ட போட்டி எதிர்வரும் செ.28ம் தேதி காலை நாகை மீன்வளத்துறை பொறியியல் கல்லூரி முதல் கங்களாஞ்சேரி வரை நடைபெற உள்ளது. இதில், நாகை மாவட்டத்தை சேர்ந்த 17 வயதிற்கு மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் மற்றும் அல்லாதவர், பொதுமக்கள் கலந்து கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.