News April 28, 2025
பட்டா, சிட்டாவுக்கு இனி சிரமம் இல்லை.

உங்கள் நிலத்தின் சர்வே எண், பட்டா விவரங்களை அறிய தமிழக அரசால் புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளது. செல்போனில் TamilNilam Geo-Info என்ற செயலியை பதிவிறக்கம் செய்தால் போதும். அதில் நாம் தற்போது எந்த இடத்தில் இருக்கின்றோமோ அந்த கூகுள் மேப்புடன், சர்வே எண் ஆகிய விவரங்கள் தெரியும். இதில் வீடு, மனை உள்ளிட்ட ஆவணங்களை மக்கள் எளிதாக சரிபார்த்து கொள்ளலாம். அனைவருக்கும் Share செய்து பயனடையுங்கள்..
Similar News
News April 28, 2025
புதுக்கோட்டை மக்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய எண்கள்

உங்கள் பகுதிகளில் இருக்கும் அத்தியாவசிய பிரச்சனைகளுக்கு நீங்கள் தொடர்பு கொள்ளவேண்டிய எண்கள் ▶வட்டாட்சியர் புதுக்கோட்டை-04322-221566, ▶வட்டாட்சியர் விராலிமலை-04339-220777, ▶வட்டாட்சியர் திருமயம்-04322-274223, ▶வட்டாட்சியர் ஆவுடையார்கோயில்-04371-233325, ▶வட்டாட்சியர் மணமேல்குடி-04371-250569, ▶வட்டாட்சியர் அறந்தாங்கி-04371-220528, ▶வட்டாட்சியர் ஆலங்குடி-04322-251223, அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க
News April 28, 2025
புதுக்கோட்டையில் வேலைவாய்ப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் HELPER பதவிக்கு 50 காலி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாத ஊதியமாக ரூ.15,000 வழங்கப்படுகிறது. 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் இங்கே<
News April 28, 2025
8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை

திருச்சியை சேர்ந்த 8 வயது சிறுமி கோவில் திருவிழாவுக்காக தன் பாட்டி ஊரான காரையூர் அருகே கரையான்பட்டிக்கு நேற்று முன்தினம் வந்தார். இந்நிலையில் திருவிழா நடந்த இடத்தில் சிறுமி விளையாடிக் கொண்டிருந்தபோது, மைக்செட் அமைப்பாளரான பிரேம்குமார் சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார். இதையறிந்த அச்சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரில் பெயரில் காவல்துறை பிரேம்குமாரை போக்சோவில் கைது செய்தனர்.