News November 21, 2025
பட்டாவில் புதிய மாற்றம்.. தமிழக அரசு அறிவித்தது

வில்லங்க சான்று(EC) போல, பட்டாவின் வரலாற்றை அறிந்து கொள்ளும் வகையில் ‘பட்டா வரலாறு’ என்ற புதிய சேவையை அடுத்த வாரம் TN அரசு செயல்பாட்டிற்கு கொண்டு வருகிறது. இதன்மூலம், அந்த நிலத்தின் உரிமையாளர், பட்டா எந்த காலகட்டத்தில் யார் யாருக்கு பெயர் மாற்றம் செய்யப்பட்டது உள்ளிட்ட விவரங்களை எளிமையாக அறிய முடியும். <
Similar News
News November 21, 2025
சென்னையில் முன்னாள் நீதிபதி மீது பெண் பரபரப்பு புகார்!

சென்னையில் 65 வயதுடைய ஓய்வுபெற்ற முன்னாள் நீதிபதி மீது பெண் ஒருவர் அத்துமீறியதாக புகார் அளித்துள்ளார். இந்தப் புகார் குறித்து டி.பி.சத்திரம் போலீசார் 2 மாதங்களாக ரகசிய விசாரணை நடத்தினர். விசாரணையில் முகாந்திரம் இருப்பதாகக் கருதி, ஓய்வுபெற்ற நீதிபதி மீது இரண்டு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். எனினும், தீவிர விசாரணைக்கு பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது
News November 21, 2025
இந்த படங்களில் இவர்கள் நடித்திருந்தால்?

பெரும்பாலான ஹிட் படங்களில், முதலில் நடிக்க இருந்த நடிகர் இவர்தான் என்ற செய்திகளை நாம் கேட்டிருப்போம். ஆனால், இந்த படத்தில் இவர்தான் முதலில் நடிக்க இருந்தாரா? என்று சில படங்கள் நம்மை ஆச்சரியப்படுத்துகின்றன. அவற்றில் சில படங்களை, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். என்னென்ன படங்கள், அதில் முதலில் நடிக்க இருந்த நடிகர் யார் என்று பாருங்க. இதுகுறித்து உங்கள் கருத்து என்ன? கமெண்ட்ல சொல்லுங்க.
News November 21, 2025
இதற்காகவே SIR-ஐ ஆதரிக்கிறோம்: EPS

வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்கள் இடம் பெற்றுவிடக் கூடாது என்பதற்காகவே SIR-ஐ ஆதரிப்பதாக EPS தெரிவித்தார். இப்பணி முழுமையாக நடைபெற்று விடக்கூடாது என்பதற்காக திமுக அதிகாரிகளுக்கு அழுத்தம் தருவதாக விமர்சித்தார். வாக்காளர் பட்டியலை தயார் செய்வதற்கு கூட திமுக முன் வரவில்லை என்றால், நாடு எப்படி முன்னேறும் என்றும் EPS கேள்வி எழுப்பினார். SIR-க்கு அதிமுக ஆதரவு தெரிவிப்பதை திமுக விமர்சித்து வருகிறது.


