News November 22, 2025

பட்டாம்பூச்சி போல் சிறகு விரித்து பறக்கும் டெல்லி

image

டெல்லி என்றாலே காற்று மாசு பிரச்னைதான் பலருக்கு ஞாபகம் வரும். ஆனால் அதையும் தாண்டி நம் மனதில் நிற்கும் ஒரு போட்டோவை நாசா வெளியிட்டுள்ளது. விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட அது, பட்டாம்பூச்சி சிறகு விரித்து பறப்பது போல் காட்சியளிக்கிறது. பளிச்சென்று எரியும் மின்விளக்குகள், அதற்கு மத்தியில் ஓடும் யமுனை என டெல்லியின் அழகு காண்போரை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

Similar News

News January 29, 2026

ரோபோ சங்கருக்கு இறந்தபின் கிடைத்த கௌரவம்

image

ரோபோ சங்கரின் மறைவு தமிழ் சினிமா துறையினர் மட்டுமின்றி ரசிகர்கள் மத்தியிலும் ஈடுசெய்ய முடியாத துயரத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் மறைந்த ரோபோ சங்கர் மற்றும் அவரது மகள் இந்திரஜாவுக்கு சிறந்த நகைச்சுவை நடிகர், நடிகைக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் ரோபாே சங்கரின் ரசிகர்கள் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News January 29, 2026

பிறந்த நாளுக்கு இனி விடுமுறை

image

போலீசார் தங்களது பிறந்தநாள், திருமண நாளன்று லீவ் எடுத்துக் கொள்ளலாம் என கர்நாடக DGP அறிவித்துள்ளார். மனதளவில் புத்துணர்ச்சி பெறவும், குடும்பத்துடன் நேரத்தை செலவிடவும், கடமைக்கும் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் இடையே ஒரு சமநிலையை பேணவும் இது உதவுகிறது. இதனால், மன உறுதியை அதிகரிப்பதோடு, மன அழுத்தமும் குறையும். இதன்மூலம், போலீசார் தங்களின் பணியில் சிறப்பாக செயல்பட முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

News January 29, 2026

மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இடஒதுக்கீடு

image

அரசுப் பணி பதவி உயர்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீடு வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதில், சார்புச் செயலாளர், பிரிவு அலுவலர் உள்ளிட்ட 13 பணியிடங்கள் பதவி உயர்விற்குத் தகுதியானவை என அவர்களுக்கு வழங்க தகுந்த பதவிகளை அடையாளம் கண்டு உத்தரவிடப்பட்டுள்ளது. நேரடிப் பணி நியமனத்தில் வழங்கப்படுவது போலவே, பதவி உயர்விலும் அதே 4 சதவீத ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

error: Content is protected !!