News October 31, 2024
பட்டாசு விபத்து: மருத்துவ உதவி எண்கள் வெளியீடு
சென்னையில், தீபாவளி போன்ற பண்டிகைக் காலங்களில், தீக்காயங்கள் ஏற்படுவது வழக்கமான ஒன்று. இந்நிலையில், அனைத்து அரசு மருத்துவ மனைகளிலும், தீக்காயங்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு தேவையான மருதத்துவ உதவிகள் தயார் நிலையில் உள்ளதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்த மருத்துவ உதவிகளை பெற 9444340496, 8754448477 என்ற எண்களிலோ அல்லது 104 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க
Similar News
News November 20, 2024
BMW கார் மோதி ரேபிடோ ஊழியர் பலி
சென்னையில் BMW சொகுசு கார் மோதிய விபத்தில் ரேபிடோ ஊழியர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரவாயல் – தாம்பரம் நெடுஞ்சாலையில் அதிவேகமாக வந்த சொகுசு கார், டூவீலர் மீது பலமாக மோதியது. இதில், பாண்டி பஜாரைச் சேர்ந்த பிரதீப் குமார் என்ற ரேபிடோ ஊழியர் 100 மீட்டர் தூரம் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார். 1 மணி நேர தேடுதலுக்கு பின், புதரில் இருந்து அவரது உடலை போலீசார் மீட்டனர்.
News November 20, 2024
மெட்ரோ ரயில் திட்டத்தில் புதிய அறிவிப்பு
சென்னையில் சுமார் 8 கி.மீ. நீளத்திற்கு அஸ்திவார தூண்கள் அமைக்கும் பணிகள் 100% நிறைவடைந்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பில் ‘கட்டம்-II, வழித்தடம் 4இல், கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் முதல் போரூர் சந்திப்பு நிலையத்திற்கு இடையே உயர்மட்ட வழித்தடத்தில் தூண்கள் அமைக்கும் பணிகளை வெற்றிகரமாக முடித்து அந்நிறுவனம் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது” எனத் தெரிவித்துள்ளது.
News November 20, 2024
இன்று ஒரே நாளில் 12 விமானங்கள் ரத்து!
சென்னை விமான நிலையத்தில் இன்று ஒரே நாளில் 12 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சென்னை விமான நிலையத்தில் சமீப காலமாக விமான சேவைகள் திடீரென ரத்து செய்யப்பட்டு வருகின்றன. பயணிகள் தொடர்ந்து அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக, இன்று ஒரு நாளில் மட்டும் புவனேஸ்வர், கொல்கத்தா, பெங்களூர், திருவனந்தபுரம், சிலிகுரி உள்ளிட்ட 12 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.