News April 17, 2024

பட்டாசு கடைகளை மூட அதிரடி உத்தரவு!

image

தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக வரும் 17.04.2024 முதல் 20.04.2024 வரையிலும் மற்றும் 02.06.2024 முதல் 05.06.2024 வரையிலும் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பட்டாசு கடைகள் மற்றும் வெடிபொருள் பட்டாசு குடோன்களை மூட மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் இன்று உத்தரவிட்டுள்ளார். இதனை
மீறுபவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Similar News

News April 18, 2025

விருதுநகரில் 4 பாதுகாக்கப்பட்ட சின்னங்கள் – தங்கம் தென்னரசு

image

விருதுநகர் மாவட்டத்தில் 4 வரலாற்றுச் சின்னங்கள் பாதுகாக்கப்பட்ட சின்னங்களாக அறிவிக்கப்படும் என சட்டசபையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். அதில் நரிக்குடி மறையூர் சத்திரம், ராஜபாளையம் வட்டம் மீனாட்சிபுரம் வானிறைக்கல், குகைஓவியம், புடைப்புச் சிற்பங்கள், மம்சாபுரம் நாயக்கர் கால மண்டபம், பிள்ளையார்நத்தம் மண்டபம் ஆகியவை தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட சின்னங்களாக அறிவிக்கப்பட உள்ளது.

News April 18, 2025

விருதுநகரில் SI பயிற்சி வகுப்புகள் ஆரம்பம்

image

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் காவல் சார்பு ஆய்வாளர்கள் (SI) 1299 பணிக்காலியிடங்களுக்கான தேர்வு அறிவிக்கை ஏப்.01 அன்று வெளியிடப்பட்டது. இத்தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் விருதுநகர் மாவட்ட தேர்வர்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் பயிற்சி வகுப்புகள் ஏப்.23 முதல் ஆரம்பிக்கவுள்ளது. இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் இங்கே <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம்.

News April 18, 2025

விருதுநகரில் ரூ.15,000 ஊதியத்தில் வேலை

image

விருதுநகரில் செயல்படும் பிரபல ஜவுளி நிறுவனத்தில் டெய்லர், தரக் கட்டுப்பாட்டாளர் உள்ளிட்ட பிரிவுகளில் 100 பேர் நியமிக்கப்பட உள்ளனர். இதில் மாதம் ஊதியமாக ரூ.15,000 வழங்கப்படும். வின்னப்பிக்க விரும்புவர்கள் இங்கே <>கிளிக்<<>> செய்து மே.31 க்குள் விண்ணப்பிக்க வேண்டும். வேலை தேடும் உங்களது நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.

error: Content is protected !!