News May 13, 2024

பட்டாசு ஆலை வெடி விபத்து: 3 பேர் மீது வழக்கு

image

விருதுநகர், சிவகாசி அருகே நாரணாபுரம் புதூரில் நேற்று காலை மகேஸ்வரி பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 3 அறைகள் தரைமட்டமான நிலையில் வெடி விபத்து தொடர்பாக ஆலை உரிமையாளர் ராஜாராம், ஃபோர்மேன்கள் கருப்பசாமி, ஜெயராம் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
முந்தைய தினம் கலவை செய்த மருந்தை இருப்பு வைத்த நிலையில் ரசாயன மூலப்பொருளில் ஏற்பட்ட வேதியியல் மாற்றம் காரணமாக வெடி விபத்து ஏற்பட்டது. 

Similar News

News October 12, 2025

விருதுநகர்: செல்போனில் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்

image

மனித உரிமைகள் ஆணையம் – 22410377
போக்குவரத்து அத்துமீறல் – 9383337639
போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832
குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
முதியோருக்கான அவசர உதவி -1253
தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
கடலோர பகுதியில் அவசர உதவி-1093
ரத்த வங்கி – 1910
கண் வங்கி -1919
விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989

இதை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க

News October 12, 2025

சாத்தூர் அருகே விபத்தில் ஒருவர் பலி

image

சிவகாசி அருகே மீனம்பட்டியை சேர்ந்த ஸ்டீபன்ராஜ்(55) சாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மேற்பார்வையாளராக பணியாற்று வருகிறார். இவர் தனது இருசக்கர வாகனத்தில் சாத்தூரில் இருந்து மீனம்பட்டி நோக்கி சென்று கொண்டிருக்கும் போது மேட்டமலை அருகே நாய் குறுக்கே வந்ததில் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

News October 12, 2025

சிவகாசி: அடுத்தடுத்து அலறிய சைரன்கள்

image

சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 1100 பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகிறது. இதில் சுமார் 4 லட்சம் தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் நடப்பாண்டில் இதுவரை
23 வெடி விபத்துக்கள் ஏற்பட்டு அதில் 41 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், 37 காயமடைந்துள்ளனர். இதில் அதிகபட்சமாக கடந்த 1.07.2025 அன்று சின்னக்காமன்பட்டி கோகுலேஸ் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.

error: Content is protected !!