News October 19, 2024

பட்டாசுகள் வெடித்து ஒருவர் உயிரிழப்பு

image

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர், சாலை தெரு பகுதியை சேர்ந்த சாகுல்ஹமீது (48). இவர் வீட்டில் புகை பிடிக்கும் போது எதிர்பாராத விதமாக வீட்டில் இருந்த பட்டாசுகள் வெடித்து சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வேடசந்தூர் போலீசார் சாகுல்ஹமீதின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News August 13, 2025

திண்டுக்கல் ஆட்சியர் எச்சரிக்கை

image

திண்டுக்கல்: சுதந்திர தினமான நாளை மறுநாள்(ஆக.15) மாவட்டத்தில் செயல்படும் டாஸ்மாக் மதுக்கடைகள் அதோடு இணைந்த பார்கள் மற்றும் எப்.எல்.-2,எப்.எல்.-3,எப்.எல்.3ஏ, எப்.எல்.-3 ஏஏ, எப்.எல்.-11 உரிமம் பெற்றபார்கள் அனைத்தும் மூடப்படுகிறது.எனவே அன்றைய தினம் மதுபானங்கள் விற்பனை செய்யக்கூடாது. அப்படி விதிகளுக்கு மாறாக மது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News August 13, 2025

திண்டுக்கல்லில் தெரு நாய்களால் அச்சம்!

image

திண்டுக்கல்: கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவுக்கு தினந்தோறும் வரும் சுற்றுலாப் பயணிகள் பல்வேறு மலா்களை பாா்த்து ரசிக்கின்றனா். இந்நிலையில், நேற்று(ஆக.12) வழக்கம்போல் பிரையண்ட் பூங்காவிலுள்ள மலா்களை சுற்றுலாப் பயணிகள் பாா்த்து ரசித்து கொண்டிருந்தனா். அப்போது, திடீரென பூங்காவுக்குள் நுழைந்த தெரு நாய்களால் சுற்றுலாப் பயணிகள் அச்சமடைந்தனா்.

News August 13, 2025

திண்டுக்கல்: டிப்ளமோ முடித்தால் ரூ.24,500 சம்பளம்! APPLY

image

திண்டுக்கல் மக்களே.., இந்திய ரிசர்வ் வங்கியின் கீழ் இயங்கும் பணம் அச்சடிக்கும் தொழிற்சாலை(BRBNMPL) நிறுவனத்தில் 88 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதுபடி, Deputy Manager, Process assistant ஆகிய பணிகளுக்கு வரும் ஆக.31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு டிப்ளமோ முடித்திருந்தாலே போதுமானது. ரூ.24,500 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க<> இங்கே கிளிக் பண்ணுங்க.<<>> SHARE IT

error: Content is protected !!