News March 14, 2025
பட்ஜெட்: சென்னையில் முதன்மை சுற்றுக்குழாய் திட்டம்

2025-26ஆம் ஆண்டு தமிழ்நாட்டுக்கான பட்ஜெட் தாக்கல் இன்று (மார்.14) சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதில், சென்னை மாநகரப் பகுதியில், முதன்மை சுற்றுக்குழாய் திட்டம் செயல்படுத்தப்படும். இதன் மூலம் ஒரு பகுதியில் உபரியாக உள்ள தண்ணீரை, மற்றொரு பகுதிக்கு கொண்டு செல்லப்படும். புதிதாக 7 மழைநீர் உறிஞ்சு பல்லுயிர் பூங்கா அமைக்கப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
Similar News
News August 5, 2025
சென்னையில் வெளுத்து வாங்கிய மழை…

மன்னார் வளைகுடா மற்றும் அதனையொட்டிய தென்தமிழக கடலோர பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், சென்னையில் நேற்று (ஆகஸ்ட் 4) பரவலாக மழை பெய்தது. சென்ட்ரல், எழும்பூர், அமைந்தகரை, அரும்பாக்கம், கோயம்பேடு, வடபழனி, கிண்டி, போரூர், ஈக்காட்டுத்தாங்கல், அம்பத்தூர், ஆவடி, திருவேற்காடு, பூந்தமல்லி, திருமுல்லைவாயல், மாதவரம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. உங்க ஏரியாவில் மாலை பெய்ததா?
News August 5, 2025
சென்னையில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம்

சென்னையில் இன்று தண்டையார்பேட்டை, திரு.வி.க நகர், ஆலந்தூர், அடையாறு, ராயபுரம், தேனாம்பேட்டை பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது. முகாம் நடைபெறும் இடங்களின் முழுமையான விபரங்களை <
News August 4, 2025
2024 ஆண்டை விட 2025ம் ஆண்டு உயிரிழப்பு குறைவு

சென்னை பெருநகரில் கடந்த ஆண்டை விட விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளை கணிசமாக குறைத்துள்ளன என காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. 2024 உடன் ஒப்பிடும்போது 03.08.2025 அன்றைய நிலவரப்படி இவ்வாண்டில் (2025) சாலை விபத்து இறப்புகள் 12% குறைந்துள்ளன. கடந்த ஆண்டு 03.08.2024 வரை 316 உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளது. இவ்வாண்டு அதே தேதி வரை ஒப்பிட்டு பார்க்கும்போது 278 உயிரிழப்புகள் நேர்ந்துள்ளது.