News February 1, 2026

பட்ஜெட்டில் இது மிகவும் ஏமாற்றம்: அன்புமணி

image

NDA-வில் இருந்து கொண்டே, மாநில வரிப் பகிர்வு விவகாரத்தில் மத்திய அரசை அன்புமணி விமர்சித்துள்ளார். பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகளை வரவேற்றுள்ள அவர், 16-வது நிதி ஆணையத்தின் பரிந்துரைப்படி, மத்திய அரசின் நேரடி வரி வருவாயில் 41% மட்டும் தான் மாநிலங்களுக்கு பகிர்ந்து வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பது ஏமாற்றமளிக்கிறது. மாநிலங்களுக்கான வரி பகிர்வை 50% ஆக உயர்த்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Similar News

News February 17, 2026

இரட்டை சுழி காரணம் என்ன?

image

தலையில் இரட்டை சுழி இருந்தால் இரண்டு திருமணம் நடக்கும், அதிக சேட்டை செய்வார்கள் என்றெல்லாம் சிலர் சொல்லிக் கேட்டிருக்கிறோம். ஆனால், அறிவியல் என்ன சொல்கிறது தெரியுமா? பெற்றோருக்கோ, மூதாதையர்களுக்கோ இரட்டை சுழி இருந்திருந்தால் மரபணு மூலம் குழந்தைகளுக்கு அது வரலாம். அல்லது, கருவில் முடி வளர்ச்சியின் முறையை சார்ந்தும் சுழி ஏற்பட வாய்ப்புள்ளது. உலகில் 5% மக்களுக்கு மட்டுமே இரட்டை சுழி உள்ளது.

News February 17, 2026

FLASH: தங்கம், வெள்ளி.. விலை பெரிய அளவில் சரிவு

image

தங்கம், வெள்ளி விலையில் ஏற்பட்டுள்ள நிலையற்ற தன்மை பாமர மக்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. <<19163011>>உலக சந்தையில் ஏற்பட்டுள்ள<<>> மாற்றத்தால் தங்கம் விலை ஒரே வாரத்தில் <<19163994>>சவரனுக்கு ₹3,760 குறைந்துள்ளது<<>>. அதேபோல் வெள்ளி கிலோவுக்கு ₹35,000 சரிந்துள்ளது. வரும் நாள்களிலும், தங்கம், வெள்ளி விலையானது சரிவை நோக்கியே இருக்கும் எனவும் இதனால், மக்கள் சிந்தித்து வாங்க வேண்டும் எனவும் பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.

News February 17, 2026

BREAKING: ₹1,070 கோடியில் புதிய டைடல் பூங்காக்கள்

image

திருச்சி, மதுரை, ஓசூரில் ₹1,070 கோடியில் புதிய டைடல் பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். மேலும், நாமக்கல், தி.மலை, விருதுநகர், நெல்லை, குமரி, ஈரோடு, நாகை, கரூர், புதுக்கோட்டையில் 9 நியூ டைடல் பூங்காக்கள் ₹388 கோடியில் கட்டப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். இதன்மூலம், 25,500 புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

error: Content is protected !!