News November 16, 2024
படைப்பாளர்களுக்கு பாராட்டு விழா

அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கென பருவ இதழ்களை பள்ளிக்கல்வித்துறை தொடங்கியுள்ளது. அதன்படி, 4 முதல் 5ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ‘ஊஞ்சல்’ என்கிற இதழும், 6 முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ‘தேன்சிட்டு’ என்கிற இதழும் வெளியிடுகிறது. சிறார் இதழ்களில் படைப்புகளை வெளியிட்ட திருப்பத்தூர் மாவட்ட இளம் படைப்பாளர்களுக்கான பாராட்டு விழா ஆட்சியர் தர்பகராஜ் தலைமையில் நேற்று நடைபெற்றது.
Similar News
News March 1, 2026
திருப்பத்தூர்: குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 வேண்டுமா?

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும். பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த பயனுள்ளத் தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News March 1, 2026
திருப்பத்தூர்: 10 அடி பள்ளத்தில் இருந்து மீட்கப்பட்ட உயிர்!

திருப்பத்தூர் நகராட்சி ஆதிசக்தி நகர் பகுதியில், நேற்று இரவு மஹாவிஷ்ணு என்பவருக்குச் சொந்தமான பசுமாடு மேய்ந்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக அருகில் இருந்த கிணற்றில் தவறி விழுந்தது. தகவலறிந்து விரைந்து வந்த திருப்பத்தூர் தீயணைப்புத் துறையினர், நீண்ட போராட்டத்திற்குப் பிறகு பசுமாட்டினை காயமின்றி பத்திரமாக மீட்டனர். தீயணைப்பு வீரர்களின் இந்த துரித நடவடிக்கையைப் பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டினர்.
News March 1, 2026
திருப்பத்தூர்: இரவு ரோந்து பணி காவலர் விவரம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று பிப்ரவரி.28 இரவு 10:00 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100-க்கு டயல் செய்யலாம். மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க


