News April 26, 2025

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை

image

சேலம் மாவட்டத்தில் உள்ள படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார். இதற்கான விண்ணப்பங்களை சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். மேலும் 0427-2401750 என்ற எண்ணை அழைக்கவும் அல்லது <>இங்கே க்ளிக்<<>> செய்யவும். இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யவும். 

Similar News

News April 26, 2025

கோவில் வெடி விபத்து – இபிஸ் கண்டனம்!

image

கஞ்சநாயக்கன்பட்டி கோயில் திருவிழாவில் ஏற்பட்ட பட்டாசு வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்ததாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. திமுக ஆட்சியில் கோயில் விழாக்களில் உரிய நெறிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை, முறையான பாதுகாப்பும் கொடுப்பதில்லை என்பதாலேயே இதுபோன்ற விபத்துகளுக்கு தொடர்கதையாகி விட்டது. அலட்சியப் போக்குடன் செயல்படும் திமுக அரசுக்கு எனது கண்டனங்கள் என அவர் தெரிவித்துள்ளார்

News April 26, 2025

ஓமலூரில் கலெக்டர் ஆறுதல்

image

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கஞ்சநாயக்கன்பட்டி திரவுபதி அம்மன் கோவில் திருவிழாவின் போது ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். படுகாயம் அடைந்த 4 பேர் ஓமலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கோர சம்பவம் ஓமலூர் பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

News April 26, 2025

குழந்தை திருமணங்கள் தடுத்த நிறுத்தம் – கலெக்டர் பெருமிதம்

image

சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தா தேவி, பெண்கள் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் கடந்த மார்ச் மாதம் குழந்தை திருமணம் குறித்து 28 புகார்கள் வந்ததாகவும், விசாரணையில் 14 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், எஞ்சியவை தவறான புகார் என்றும் தெரிவித்தார்

error: Content is protected !!