News January 17, 2026

படம் ரிலீஸ் தேதி மீண்டும் ஒத்திவைக்கப்படுகிறதா?

image

கடந்த தீபாவளி அன்று ரிலீசாக வேண்டிய விக்னேஷ் சிவனின் ‘LIK’ படம், அப்படியே டிசம்பர் ரிலீஸ், பொங்கல் ரிலீஸ் என ஒத்திவைக்கப்பட்டு கொண்டே இருந்தது. இதன்பிறகு பிப்ரவரி 14 அன்று ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த முறையும் தள்ளிப்போகலாம் என சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது. படத்தின் நாயகன் பிரதீப்பின் வற்புறுத்தலால் சில காட்சிகள் ரீ ஷூட் செய்யப்பட இருப்பதே இதற்கு காரணம் என்கின்றனர்.

Similar News

News January 25, 2026

தேர்தலில் அண்ணாமலை போட்டியிடவில்லையா?

image

2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியிட வாய்ப்பில்லை என பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதற்கு பதிலாக அவருக்கு பாஜக தேசிய பொதுச் செயலாளர் பதவி வழங்கப்படலாம் என தகவலறிந்தவர்கள் கூறுகின்றனர். ஒருவேளை அப்படி நிகழ்ந்தால், தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சிக்கு இது பயனளிக்கும் என கருதுகிறார்களாம். நிதின் நபினை தொடர்ந்து இளைஞரான அண்ணாமலைக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என கூறப்படுகிறது. உங்கள் கருத்து என்ன?

News January 25, 2026

₹1,200 பென்ஷன் அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்

image

சிறப்பு ஓய்வூதியம் பெற்றுவரும் சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், கிராம ஊராட்சி செயலாளர்கள் உயிரிழந்தால், குடும்ப ஓய்வூதியமாக ₹1,200 வழங்கப்படும் என CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். குறு அங்கன்வாடி பணியாளர்கள், வன களப்பணியாளர்கள் உள்ளிட்ட இதர சிறப்பு காலமுறை ஊதியப் பணியாளர்கள் உயிரிழந்தால் குடும்ப ஓய்வூதியமாக ₹1,100 வழங்கப்படும் எனவும் CM பேரவையில் அறிவித்தார்.

News January 25, 2026

ஆட்சியில் பங்கு: ஸ்ட்ரிக்ட் ஆக சொன்ன ராகுல்

image

ஆட்சியில் பங்கு தர வேண்டும் எனப் பேசி, திமுக-காங்கிரஸ் கூட்டணி சர்ச்சையில் மையப்புள்ளியாக இருந்தவர் மாணிக்கம் தாகூர். இந்நிலையில், தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு தொடர்பான கருத்துகளை பொதுவெளியில் பேசக்கூடாது என ராகுல் தெரிவித்ததாக மாணிக்கம் தாகூர் MP கூறியுள்ளார். மேலும், இதுதொடர்பாக தனது கருத்துகளை ராகுலிடம் தெளிவாக விளக்கிவிட்டதாகவும் அவர் பேசியுள்ளார்.

error: Content is protected !!