News April 25, 2024
படப்பை அருகே சட்ட கல்லூரி மாணவி தற்கொலை

படப்பை அருகே செரப்பனஞ்சேரி பகுதியில் இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவரது மகள் மீனா வ/17. இவர் புதுப்பாக்கம் டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று மீனா வீட்டின் உள் அறையில் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த மாணவியின் தற்கொலை குறித்து மணிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News April 19, 2025
காஞ்சியில் நாளைய (ஏப்ரல் 20) மின்தடை விவரம்

ஸ்ரீபெரும்புதுார் துணைமின் நிலையம்: மப்பேடு, செங்காடு, உசேன் நகர், விஸ்வநாதகுப்பம், அமுஞ்சிவாக்கம், சமத்துவபுரம், இருங்காட்டுக்கோட்டை, நெமிலி, சிவன்தாங்கல், என்.ஜி.ஓ., காலனி, சுகம்தரும்பேடு, தண்டலம், மேவலுார்குப்பம், மண்ணுார், நயப்பாக்கம், பாப்பரம்பாக்கம் ரோடு, வளர்புரம், கிறிஸ்தவ கண்டிகை, செட்டிபேடு ஆகிய பகுதிகளில் நாளை காலை 9:00 மணி முதல், மாலை 5:00 மணி வரை மின்தடை ஏற்படும். ஷேர் பண்ணுங்க
News April 19, 2025
விஸ்வகர்மா திட்டம் சமூக நீதிக்கான திட்டம் அல்ல

குன்றத்தூரில் இன்று (ஏப்ரல் 19) கலைஞர் கைவினைத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துப் பேசினார். அப்போது, “விஸ்வகர்மா திட்டம் சமூக நீதிக்கான திட்டம் அல்ல. குலத்தொழிலை ஊக்குவிக்கிறது. விஷ்வகர்மா திட்டம் படிப்பை விட்டு வெளியேற்றி குடும்ப தொழிலை செய்ய ஊக்குவிக்கிறது. படிப்பை விட்டு குலத்தொழிலுக்கு செல்லுமாறு மாணவர்களை வஞ்சிக்க மத்திய அரசு திட்டம் தீட்டுவதாக” கூறினார்.
News April 19, 2025
5 அறிக்கைகளை வெளியிட்டார் முதல்வர்

குன்றத்தூரில் இன்று (ஏப்ரல் 19) கலைஞர் கைவினைத் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது, புவிசார் குறியீடு பெறுவதற்கு வழங்கப்படும் மானியம் ரூ.1 லட்சமாக உயர்த்தப்படும். அம்பத்தூர் தொழிற்பேட்டையில் வாகன பொறியியல் உதிரிப்பாக நிறுவனங்களுக்கு ரூ.5 கோடியில் ஆய்வகங்கள் அமைக்கப்படும். பழந்தண்டலில் சாலை கட்டமைப்பு மழைநீர் வடிகால் அமைக்க ரூ.5 கோடி ஒதுக்கீடு உள்ளிட்ட 5 அறிக்கைகளை வெளியிட்டார்.