News February 26, 2025
படகு சவாரியில் எழுந்தருளிய முத்துமாரியம்மன்

சிவகாசி காய்கறி சந்தை அருகே உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் மாசி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் முத்துமாரியம்மன் வெவ்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். அந்த வகையில் 8ம் நாளான இன்று ஆனந்த கோலத்தில் படகு சவாரியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதைத் தொடர்ந்து அம்மனை மனம் உருக வழிபட்டனர்.
Similar News
News October 30, 2025
விருதுநகர்: உங்கள் வீட்டில் குழந்தைகள் இருக்கா?

விருதுநகரில் உள்ள அங்கன்வாடி மையங்கள், ஆரம்ப மற்றும் துணை சுகாதார நிலையங்களில், இந்த மாதம் 31ஆம் தேதி வரை 6 மாதம் முதல், 6 வயது வரையான குழந்தைகளுக்கு, ‘வைட்டமின் ஏ’ திரவம் இலவசமாக வழங்கப்படவுள்ளது. குழந்தைகளுக்கு கண் குருடு, குடல், சிறுநீர், சுவாசப் பாதைகள் மற்றும் தோல் போன்ற உறுப்புகளை தொற்றிலிருந்து பாதுகாக்க ‘வைட்டமின் ஏ’ உதவுகிறது. குழந்தை வைத்திருக்கும் அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News October 30, 2025
சிவகாசி அருகே இளம்பெண்ணின் கையை வெட்டிய நபர் கைது

சிவகாசி அருகே ரிசர்வ்லையன் பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார்-கவிதா (30)தம்பதி. கருத்து வேறுபாட்டால் கவிதாவை விட்டு முத்துக்குமார் பிரிந்து சென்றதால் சேகர்(33) என்பவருடன் கவிதாவுக்கு பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கவிதாவின் நடத்தையில் சந்தேகமடைந்த சேகர் குடித்துவிட்டு கவிதாவை தாக்கினார். இதனால் அவரிடம் பேசுவதை நிறுத்தியதால் கவிதாவை வழிமறித்து மறைத்து வைத்திருந்த கத்தியால் கையில் வெட்டினார்.
News October 30, 2025
விருதுநகர் அருகே பெண் சடலம் மீட்பு

நரிக்குடி அருகே சாலை இலுப்பைகுளம் பயணிகள் நிழற்குடைக்குள் 75 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத மூதாட்டி சடலமாக கிடந்தார். தகவலறிந்து விரைந்து சென்ற நரிக்குடி போலீசார் உடலை மீட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். பல ஆண்டுகளாக அப்பகுதியில் வசித்து வந்ததாக தெரியவந்த நிலையில், உயிரிழந்த காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


