News August 22, 2024

பஞ்சப்பூரில் ஆய்வு செய்த அமைச்சர்

image

திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமான பணிகளை இன்று அமைச்சர் கே.என்.நேரு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் பணிகளை விரைவாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு அவர் அறிவுறுத்தினார். இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Similar News

News August 14, 2025

திருச்சி: டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு

image

சுதந்திர தினத்தை முன்னிட்டு வரும் ஆக.15-ம் தேதி, திருச்சி மாவட்டத்தில் இயங்கும் அனைத்து வகை மதுபான கடைகள் மற்றும் கூடங்கள் மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் சரவணன் அறிவித்துள்ளார். அன்றைய தினத்தில் மதுபானம் விற்பனை செய்வதையோ, வேறு இடங்களுக்கு கொண்டு செல்வதையோ தவிர்க்க வேண்டும் என்றும், மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆட்சியர் எச்சரித்துள்ளார். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

News August 13, 2025

திருச்சி: VOTER லிஸ்டில் உங்க பெயர் இல்லையா? Check It

image

திருச்சி மக்களே, உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை கொண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை உடனே செக் பண்ணுங்க. இந்த தளத்தில் உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை (VOTER ID) டைப் செய்து <>கிளிக் <<>>செய்யவும். அதில், உங்கள் பெயர், ஊர், எந்த இடத்தில் நீங்க வாக்கு செலுத்த வேண்டும் என்ற அனைத்து விவரங்களும் நொடியில் தெரிந்துவிடும். உடனே CHECK பண்ணுங்க. உங்கள் பகுதியினருக்கு SHARE பண்ணுங்க!

News August 13, 2025

மணப்பாறையில் ஆகஸ்ட் 16-ல் மாநில அளவில் சிலம்பம் போட்டி

image

மணப்பாறை அருகே ஆலத்தூரில் உள்ள கலைக்கல்லூரியில் ஆகஸ்ட் 16ம் தேதி மாநில அளவிலான திறந்தநிலை சிலம்பம் போட்டி நடைபெறுகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை நடைபெறும் போட்டியில் முன்பதிவு செய்துகொள்ள அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஒற்றை சிலம்பம், சுருள் வாள் உள்ளிட்ட பல்வேறு வகை சிலம்ப போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெறுவோருக்கு சான்றிதழ் வழங்கப்படும்.‌ விபரங்களுக்கு 9942563462, 90957 05988 அழைக்கவும்.

error: Content is protected !!