News November 23, 2025
பஞ்சபட்டியில் வீட்டின் பின்புறம் மது விற்ற பெண் கைது

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுகா மேல பஞ்சபட்டியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் மனைவி மலர் (45). இவர் தனது வீட்டின் பின்புறம் சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளார். தகவல் அறிந்து அங்கு சென்ற லாலாபேட்டை போலீசார் மது விற்ற மலர் மீது வழக்குப்பதிந்து இன்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த அனைத்து மது பாட்டில்களும் பறிமுதல் செய்தனர்.
Similar News
News February 13, 2026
கரூர்: VAO லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை கிராம நிர்வாக அலுவலரின் (விஏஓ) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் விஏஓ யாரேனும் உங்களிடம் லஞ்சம் கேட்டால், கரூர் மாவட்ட மக்கள் 04324225100 என்ற எண்ணில் தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!
News February 13, 2026
அறிவித்தார் கரூர் கலெக்டர்!

கரூரில் அனைத்து தாலுகாக்களிலும் நாளை (பிப்.14) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம் நடைபெறுகிறது. கரூர், அரவக்குறிச்சி உட்பட 7 வட்ட வழங்கல் அலுவலகங்களில் நடைபெறும் இம்முகாமில், பெயர் திருத்தம், மொபைல் எண் பதிவு மற்றும் புதிய அட்டை கோரி விண்ணப்பிக்கலாம். பொதுமக்கள் தங்கள் பகுதி முகாம்களில் பங்கேற்று குறைகளை நிவர்த்தி செய்யுமாறு கலெக்டர் தெரிவித்துள்ளார். SHAREIT
News February 13, 2026
கரூர் மாவட்ட இரவு ரோந்து காவலர்கள் விவரம்

கரூர் மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச் செயல்களைத் தடுக்கவும் இரவு நேர ரோந்துப் பணிக்குச் சிறப்பு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். சட்ட ஒழுங்கைப் பராமரிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசரக் காலங்களில் பொதுமக்கள் தங்கள் பகுதி காவல் அதிகாரிகளை நேரடியாகத் தொடர்பு கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


