News February 11, 2025
பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

2024-ஆம் ஆண்டிற்கான தமிழக அரசு வழங்கும் பசுமை சாம்பியன் விருது தமிழக அளவில் 100 பேருக்கு வழங்கப்படவுள்ளது. விண்ணப்பங்கள், தி.மலை மாவட்டம் ஆட்சியர் அலுவலக இணையதளம் (https://tiruvannamalai.nic.in/) மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகம் ஆகிய இடங்களில் கிடைக்கும். விண்ணப்பிக்க கடைசி நாள் 15.04.2025 என மாவட்ட ஆட்சியர் க. தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 21, 2025
தி.மலை மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் இன்று (ஆகஸ்ட் 21) நடைபெறும் இடங்கள் அதன் விவரம் மேலே உள்ள படத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இம்முகாமில் மகளிர் உரிமைத் தொகை, முதியோர் உதவித்தொகை, வாரிசு, வருமானம், இருப்பிடம், சாதி, பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களுக்கு மனு அளித்து பொதுமக்கள் பயன்பெறலாம். மேலும் இந்த முகாமில் திரளான பொதுமக்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
News August 20, 2025
தி.மலை: பள்ளி மாணவிகளுக்கு ரூ-1000 ஊக்கத்தொகை

தி.மலை (ஆக்-20) பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பாக கிராமப்புற சிறுபான்மையின பள்ளி மாணவியர்களுக்கு மாதம் 1000 வரை ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 3-வகுப்பு முதல்5- வகுப்பு வரை மாணவியருக்கு ரூ-500 6ஆம் வகுப்பு மாணவிக்கு ரூ-1000 ஆண்டு வருமானம் 1 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். கல்வியின் இடைநிற்றலை குறைக்க திட்டம்.
News August 20, 2025
தி.மலையில் இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 20) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.