News January 9, 2025
பசுமைத்திட்ட பள்ளியாக து.களத்தூர் பள்ளி தேர்வு

பசுமைப் பள்ளிக்கூடத் திட்டத்தின் கீழ் முதலமைச்சரின் பசுமைத் தமிழ்நாடு திட்டத்தின் குறிக்கோளை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான சூழல் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள 2024-2025 ஆம் ஆண்டில் தமிழகத்தில் தேர்வு செய்யப்பட்ட 100 பள்ளிகளில் பெரம்பலூர் மாவட்டத்தில் து.களத்தூர் பள்ளியும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ரூ.20,000 பரிசு வழங்கப்பட உள்ளது.
Similar News
News February 2, 2026
பெரம்பலூர் மாவட்ட மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (பிப்.02) பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் குறித்த மனுக்களை நேரில் வழங்கி தீர்வுகாணலாம். அனைத்துத் துறை அதிகாரிகளும் பங்கேற்கும் இந்நிகழ்வில், தகுதியுள்ள மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News February 2, 2026
பெரம்பலூர்: இன்று இங்கெல்லாம் மின்தடை!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம், கழனிவாசல், மங்களமேடு, நன்னை ஆகிய துணை மின் நிலையங்களில் இன்று (பிப்.02) பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக இங்கிருந்து மின் விநியோகம் பெரும் மேலமாத்தூர், வெண்மணி, நல்லறிக்கை, திருமந்துறை, பெருமாத்தூர், வாலிகண்டபுரம் உள்ளிட்ட பகுதிகள் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE பண்ணுங்க!
News February 2, 2026
பெரம்பலூர்: மின்தடை அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்டம், நன்னை துணைமின் நிலையத்தில் (02.02.2026) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக பரவாய், கிழுமத்தூர், ஓலைபாடி, எழுமூர், நன்னை உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9:30 மணி முதல் பராமரிப்பு பணி முடிவடையும் வரை மின்தடை ஏற்படும் என துணை மின்செயர் பொறியாளர் தெரிவிக்கப்பட்டுள்ளது.


