News February 24, 2026

பங்குச் சந்தைகளில் பெரும் சரிவு.. ₹3 லட்சம் கோடி காலி

image

இந்திய பங்குச் சந்தைகள் கடும் சரிவைச் சந்தித்தன. சென்செக்ஸ் 1068 புள்ளிகள் சரிந்து 82,225 ஆகவும், நிஃப்டி 276 புள்ளிகள் சரிந்து 25,424 ஆகவும் வர்த்தகம் முடிவடைந்துள்ளது. ரூபாய் மதிப்பு சரிவு, ஐடி பங்குகளின் விற்பனை அதிகரிப்பு, உலகளாவிய சந்தைகளில் ஏற்ற இறக்கம், கச்சா எண்ணெய் விலையில் எழுச்சி ஆகியவை சரிவுக்கு காரணம். இன்று ஒரேநாளில் ₹3 லட்சம் கோடி அளவுக்கு முதலீட்டாளர்கள் இழப்பை சந்தித்துள்ளனர்.

Similar News

News February 26, 2026

பட்டியலின இளைஞர் கொலையை மறைத்த திமுக: EPS

image

ஒட்டன்சத்திரம் அருகே பெருமாள் என்ற பட்டியலின இளைஞர் ஆணுறுப்பு அறுக்கப்பட்டு, உடலில் துளையிடப்பட்டு மிகக் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டதற்கு EPS அதிர்ச்சி தெரிவித்துள்ளார். கடந்த ஜன.30-ம் தேதி நடந்த சம்பவம் வெளியே வர விடாமல் ஆளும் திமுக தடுத்துள்ளது என குற்றஞ்சாட்டியுள்ளார். பெருமாள் கொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

News February 26, 2026

சற்றுமுன்: நடிகர் கோபகுமார் காலமானார்

image

மோகன்லால் அறிமுகமான ‘திறனோட்டம்’ என்ற மலையாள படத்தில் ஹீரோவாக நடித்த கோபகுமார்(73) இன்று காலமானார். இவர் தமிழில் சில படங்களிலும், உள்ளத்தை அள்ளித்தா என்ற டிவி சீரியலிலும் நடித்துள்ளார். சட்டம் படித்த அவர், சவுதி அரேபியாவில் பல நிறுவனங்களுக்கு சட்ட ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார். இறுதி காலத்தை சொந்த ஊரான புன்னபுரத்தில் கழித்து வந்த அவர், இன்று மறைந்தார். RIP

News February 26, 2026

இந்தியரிடம் ₹35,000 கடன் பெற்ற பிரிட்டிஷ் அரசு

image

இந்தியாவை 200 ஆண்டுகளாக ஆண்ட பிரிட்டிஷ் அரசு, முதல் உலகப் போர் செலவுகளை சமாளிக்க மக்களிடம் கடன் வாங்கியது. இந்நிலையில் MP-ஐ சேர்ந்த விவேக் ருதியா, அலமாரியில் இருந்த சொத்து ஆவணங்களை சரிபார்த்த போது, தனது தாத்தா பிரிட்டன் அரசுக்கு ₹35,000 கடன் வழங்கிய ஆதாரம் கிடைத்தது. கடனின் மதிப்பு தற்போது கோடிகளில் இருக்கும் என நிபுணர்கள் கூறுவதால் வட்டியும், முதலுமாக பணத்தை திரும்பப்பெற அவர் முயற்சிக்கிறார்.

error: Content is protected !!