News November 7, 2025
பங்குச்சந்தைகள் கடும் சரிவு.. முதலீட்டாளர்கள் கலக்கம்!

இந்தியப் பங்குச்சந்தைகள் 2-வது நாளாக கடும் சரிவைக் கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் கலக்கமடைந்துள்ளனர். சென்செக்ஸ் 479 புள்ளிகள் சரிந்து 82,831 ஆகவும், நிஃப்டி 131 புள்ளிகள் சரிந்து 25,378 ஆகவும் வர்த்தகமாகி வருகின்றன. NTPC, TCS, Tech Mahindra, Kotak Mahindra உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களின் பங்குகள் சரிந்துள்ளன. நீங்கள் வாங்கிய SHARE உங்களுக்கு லாபம் தந்ததா?
Similar News
News November 7, 2025
ஒரே நேரத்தில் இரண்டு புயல் சின்னம்.. கனமழை ALERT

வங்கக்கடலில் நவ.14 மற்றும் நவ.19-ல் அடுத்தடுத்து 2 காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் உருவாக வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. இதனால், தமிழகத்தில் வரும் நாள்களில் பரவலாக மழை பெய்யக் கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இன்று(நவ.7) ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், தூத்துக்குடி, நாமக்கல், திருச்சி, மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய கூடும் என IMD தெரிவித்துள்ளது.
News November 7, 2025
எறும்புக்கு பயந்து பெண் தற்கொலை!

சில விஷயங்கள் மீதான அதீத பயத்திற்கு ஃபோபியா என்று பெயர். அப்படி ஒரு ஃபோபியா, உயிர் ஒன்றை பறித்த சம்பவம் தெலங்கானா, சங்காரெட்டியில் நடந்துள்ளது. Myrmecophobia என்ற எறும்புகள் மீதான தீவிர பயத்தால், கணவனையும், 3 வயது மகளையும் விட்டுவிட்டு, பெண் ஒருவர் தற்கொலை செய்துள்ளார். அவர் எழுதி வைத்த கடிதத்தில், ‘இனிமேல் எறும்புகளுடன் வாழ முடியாது’ என்று குறிப்பிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
News November 7, 2025
பிரபல நடிகை கத்ரீனா கைஃப் அம்மா ஆனார் ❤️❤️

பிரபல நடிகை கத்ரீனா கைஃப்புக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. இது குறித்து அவரது கணவரும், நடிகருமான விக்கி கவுசல் இன்ஸ்டாவில், ‘எங்கள் சந்தோஷம் வந்துவிட்டது. எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது’ என குறிப்பிட்டுள்ளார். பாலிவுட் நடிகர் விக்கி கௌசலுக்கும் (37), நடிகை கத்ரீனா கைஃப்பிற்கும் (42) கடந்த 2021-ம் ஆண்டு திருமணம் நடந்தது. கத்ரீனா – விக்கி ஜோடிக்கு வாழ்த்துக்கள் குவிகின்றன.


