News April 8, 2024
பக்தர்களே நாளை முதல் துவக்கம்

மதுரை சித்திரை திருவிழாவின் மீனாட்சி திருக்கல்யாண விழா வரும் ஏப்.21ம் தேதி காலை 8.35 மணி முதல் 8.59 மணிக்குள் நடைபெறுகிறது. திருக்கல்யாண விழாவில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள் ரூ. 200, ரூ.500க்காண கட்டணச்சீட்டு நாளை முதல் ஏப்.13ம் தேதி இரவு 9 மணி வரை ஆன்லைனில் பெறலாம். இந்து சமய அறநிலையத்துறை இணையதளமான https://hrce.tn.gov.in மற்றும் https://maduraimeenakshi.hrce.tn.gov.in மூலம் பெற்றுக்கொள்ளலாம்
Similar News
News February 8, 2026
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை திறப்பு குறித்த தகவல்!

மதுரை, திருப்பரங்குன்றம் தொகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 2019ல் அடிக்கல் நாட்டப்பட்டாலும், கட்டுமானப் பணிகள் 2024 – மே மாதமே தொடங்கின. ரூ.2,021 கோடியில் 29 கட்டடங்கள் அமைக்கப்படுகின்றன. மார்ச் 1ல் திறப்பு என தகவல் பரவினாலும், தற்போது கட்டுமானப் பணிகள் நடந்து வருவதாக மத்திய அரசு உறுதி செய்துள்ளது. ஜூன் மாதம் புறநோயாளிகள் பிரிவு செயல்படலாம் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
News February 8, 2026
சோழவந்தானில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சா ?

சோழவந்தான் சங்கங்கோட்டை முத்தையா என்பவர் வீட்டில் இன்று (பிப்.8) அதிகாலை மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதாக கூறப்படுகிறது. வீட்டின் மதில் சுவரில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட அடையாளங்கள், ஜன்னல் வழியாக உள்பக்க கதவு பகுதியில் லேசான சேதம் இருந்தது. சோழவந்தான் போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை தற்போது ஆய்வு செய்து வருகின்றனர்.
News February 8, 2026
மதுரை: Driving Licence-க்கு வந்த முக்கிய Update!

மதுரை மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் இந்த <


