News February 16, 2025

பகுதி நேர வேலை வாங்கி தருவதாக மோசடி

image

திருநெல்வேலி மாவட்ட காவல்துறை நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நிறுவனங்களின் பெயரை குறிப்பிட்டு ஆன்லைன் மூலம் பகுதி நேர வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்யும் விளம்பரங்களை நம்ப வேண்டாம் .ஆசை வார்த்தை கூறி சிறிய தொகையை முதலீடு செய்ய வைத்து மோசடியில் ஈடுபடுகின்றனர். எனவே விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக் கொண்டனர்.

Similar News

News March 3, 2026

BREAKING: நாங்குநேரி போலீசாருடன் தள்ளுமுள்ளு…!

image

நெல்லை, நாங்குநேரி அருகே பெரும்பத்து கிராமத்திற்குள் புகுந்து கண்ணில் பட்டவர்களை வெட்டிச் சாய்த்த கொடூரம். பெரும்பத்து கிராம மக்கள் ஒன்று கூடி, நீதி கேட்டு சாலைமறியலில் ஈடுபட முயன்றபோது போலீசார் பேரிகார்டுகளை வைத்து தடுத்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மற்றும் போலீசார் இடையே தள்ளுமுள்ளு. இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.

News March 3, 2026

நெல்லை : உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

image

பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக 2015-ல் தொடங்கப்பட்டது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் (ம) பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News March 3, 2026

நெல்லை செங்கோட்டை ரயில் பகுதி தூரம் ரத்து

image

நெல்லை ரயில் நிலையத்தில் 6வது நடை மேடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் இன்று, நாளை மற்றும் 6ம் தேதி ஆகிய 3 தினங்களுக்கு செங்கோட்டையில் இருந்து காலை 10 மணிக்கு புறப்படும் பாசஞ்சர் ரயில் சேரன்மகாதேவியோடு நிறுத்தப்படும். நெல்லையிலிருந்து மதியம் 2.40 மணிக்கு புறப்படும் செங்கோட்டை பாசஞ்சர் ரயிலும் நெல்லை – சேரன்மகாதேவி இடையே பகுதி தூரம் ரத்து செய்யப்படுகிறது.

error: Content is protected !!