News December 5, 2025
பகவத் கீதையை புடினுக்கு பரிசளித்த PM மோடி

அரசு முறைப்பயணமாக இந்தியா வந்துள்ள அதிபர் புடினுக்கு PM மோடி பகவத் கீதையை பரிசளித்துள்ளார். இதுபற்றி X-ல் PM மோடி, பகவத் கீதையின் போதனைகள் உலகெங்கிலும் வாழும் லட்சக்கணக்கான மக்களுக்கு உத்வேகத்தை அளிக்கும் என்று தெரிவித்துள்ளார். இதைதொடர்ந்து, லோக் கல்யாண் மார்கில் உள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் அதிபர் புடினுக்கு சிறப்பு விருந்து அளிக்கப்பட்டது.
Similar News
News March 7, 2026
இனி மது வாங்க பெங்களூரு செல்வது வேஸ்ட்!

கர்நாடக அரசு இதுவரை மதுபான விலையை நிர்ணயம் செய்து வந்த நிலையில், வரும் ஏப்ரல் முதல் இக்கட்டுப்பாடு முழுவதுமாக நீக்கப்படுகிறது. இனி அரசுக்கு பதிலாக மது விற்பனை நிலையங்களே விலையை தீர்மானிக்கலாம். மேலும், வரி விதிப்பு முறையில் மாற்றம் செய்துள்ள அரசு, மதுபானத்தில் உள்ள ஆல்கஹால் அளவுக்கு ஏற்ப வரி விதிக்க முடிவு செய்துள்ளது. இதனால் மதுவிலை சந்தை நிலவரத்துக்கு ஏற்ப மாறுபட வாய்ப்புள்ளது.
News March 7, 2026
BREAKING: அதிமுகவில் இருந்து தங்கமணி விலகுகிறாரா?

EPS – தங்கமணி இடையே பனிப்போர் நிலவுவதாக தகவல் வெளியாகியுள்ளது. தங்கமணி உடனான மோதல்போக்கு காரணமாகவே, EPS தனது நாமக்கல் பரப்புரையை தாமதமாக நடத்தியதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால், இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. தங்கமணி அதிருப்தியில் இருப்பதாகவும் அதிமுகவில் இருந்து விலகுவதாகவும் கடந்தாண்டே செய்தி வெளியானது. ஆனால், இதனை மறுத்து அவர் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
News March 6, 2026
விவாகரத்து சர்ச்சை.. விஜய்க்கு தொடரும் சிக்கல்

விவாகரத்து சர்ச்சைக்கு நடுவே த்ரிஷாவுடன் விஜய் ஒன்றாக நிகழ்ச்சியில் கலந்து கொண்டது SM-ல் பேசுபொருளாகியுள்ளது. எதிர்க்கட்சிகளின் விமர்சனத்திற்கு விஜய் ஆளாகியுள்ள நிலையில், நேற்றிரவு முதல் அதிகளவில் மீம்ஸ்கள் வைரலாகி வருகின்றன. மேலும், தவெக தொண்டர்கள் பலரும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருவதையும் காண முடிகிறது. அதேநேரம், <<19309273>>விஜய்க்கு ஆதரவாகவும்<<>> குரல்கள் எழுந்துள்ளன. இது பற்றி உங்க கருத்து?


