News January 25, 2026
நோ காஸ்ட் EMI… எச்சரிக்கும் நிபுணர்கள்!

நம்மில் பலரும் ‘No Cost EMI’ மூலம் ஆன்லைனில் பொருட்களை வாங்கினால், வட்டி இருக்காது என நினைக்கிறோம். ஆனால், பொருட்களின் விலையில் வட்டி சேர்க்கப்பட்டுள்ளதாகவும், கூடுதலாக, செயலாக்க கட்டணம் + ஜிஎஸ்டியை வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டும் எனவும் நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும் அதிக கால EMI காரணமாக, கடன் பயன்பாட்டு விகிதம் அதிகரித்து CIBIL ஸ்கோர் குறையலாம் எனவும் எச்சரிக்கின்றனர்.
Similar News
News April 2, 2026
தந்தை – மகன் போட்டி உருவாகுமா?

ராமதாஸ் தரப்பில் பென்னாகரம் தொகுதிக்கு இதுவரை வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. சிட்டிங் MLA ஜி.கே.மணியின் மகன் தமிழ்க்குமரன் காங்.,கில் இணைந்த நிலையில், அவரே அங்கு போட்டியிடுவார் எனக் கூறப்படுகிறது. இதனால் மகனை எதிர்த்து களமிறங்குவதா என ஜி.கே.மணி யோசிப்பதால், அத்தொகுதியில் வேட்பாளர் தேர்வில் தாமதம் ஏற்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. என்ன முடிவெடுப்பார் ராமதாஸ்?
News April 2, 2026
சின்னம்மையில் இருந்து பாதுகாத்து கொள்ள..

வெயிலின் தாக்கத்தால், தமிழகத்தில் <<19543883>>சின்னம்மை <<>>பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. இது காற்று மூலமாக, வைரஸ் வழியாக எளிதாக ஒருவருக்கு ஒருவர் பரவுகிறது. இந்த கொடிய பாதிப்பில் இருந்து தற்காத்து கொள்ள, டாக்டர்கள் கூறும் டிப்ஸை தொகுத்துள்ளோம். அவை என்னென்ன என அறிய மேலே உள்ள போட்டோக்களை இடது புறமாக Swipe செய்யவும். இந்த விழிப்புணர்வு பதிவை நண்பர்களுக்கு பகிரவும்.
News April 2, 2026
BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹800 குறைந்தது

சர்வதேச சந்தையில் தங்கம் விலை நேற்றுடன் ஒப்பிடுகையில் தலைகீழாக 2.5%(120 டாலர்கள்) குறைந்துள்ளது. அதன் எதிரொலியால், சென்னையில் இன்று கிராமுக்கு ₹100 குறைந்து ₹13,950-க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ₹800 குறைந்து ₹1,11,600-க்கு விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் இதே நிலை நீடித்தால், நம்மூர் சந்தையில் பிற்பகலிலும் தங்கம் விலை கணிசமாக குறைய வாய்ப்புள்ளது.


