News March 26, 2025
நோய் விலகி நலம் தரும் திருநீா்மலை ரங்கநாதர்

தென் சென்னைப் பகுதியில் உள்ள குரோம்பேட்டையில் இருந்து 5 கி.மீ தூரத்தில் பிரசித்தி பெற்ற திருநீா்மலை ரங்கநாதர் சுவாமி கோவில் உள்ளது. இத்தலத்தில் உள்ள குளத்தில் நீராடி வழிபட்டால் நோய் விலகி நலம் உண்டாகும். மேலும், குழந்தை இல்லாதவர்கள் மரத்தில் தொட்டில் கட்டியும், திருமண தடை நீங்க கிரிபிரதட்சணம் செய்தும் வழிபட்டால் உடனே வேண்டியது நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. ஷேர் பண்ணுங்க.
Similar News
News March 29, 2025
சென்னையில் சுட்டெரிக்கும் வெயில்- தப்பிக்க சில டிப்ஸ்

சென்னையில் இன்று வெயில் சதமடித்துள்ளது(102.5). இந்நிலையில், சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தப்பிக்க, 1. 2 மணி நேரத்துக்கு ஒரு டம்ளர் வீதம் (250 மி.லி) நாளொன்றுக்கு 10- 12 டம்ளர் தண்ணீர் பருக வேண்டும். 2. எளிதில் செரிமானமாகும் உணவுகளை சாப்பிடுங்கள். 3. மது, புகைபிடிப்பதை தவிர்க்கவும். 4. நீர் சத்து நிறைந்த உணவுகளை எடுக்க வேண்டும். 5. வெளியே செல்லும் போது குடை எடுத்து செல்லுங்கள். ஷேர் பண்ணுங்க.
News March 29, 2025
சனி தோஷம் நீக்கும் வட திருநள்ளாறு

சென்னை பொழிச்சலூரில் அகத்தீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் வட திருநள்ளாறு என்றும் அழைக்கப்படுகிறது. சிவபெருமானை வழிபட்டு சனீஸ்வரர் பாவ விமோஷனம் பெற்ற தலங்களில் ஒன்றாக இக்கோயில் இருப்பதால் சனி பரிகார தலமாக விளங்குகிறது. இங்கு வந்து வழிபட்டால் ஏழரை, அஷ்டம, அர்த்தாஷ்டம, சனி தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். இன்று சனிப்பெயர்ச்சி நடைபெறுவதால் இங்கு சென்று வழிபடலாம். ஷேர் பண்ணுங்க
News March 29, 2025
சென்னையில் பிரபல பைக் திருடன் கைது

சென்னையின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து பைக்குகளை குறிவைத்து திருட்டில் ஈடுபட்டு வந்த, சோளிங்கர் பகுதியைச் சேர்ந்த இம்ரான் (33) என்பவரை போலீசார் இன்று (மார்.29) கைது செய்துள்ளனர். மேலும், அவரிடம் இருந்து 8 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தேனாம்பேட்டையில் பைக்கை திருடி, புதுப்பேட்டையில் பழைய வாகனங்களின் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடையில் கொடுத்தபோது போலீசாரிடம் பிடிபட்டார்.