News December 16, 2025
நேஷனல் ஹெரால்டு வழக்கு.. சோனியா, ராகுலுக்கு நிம்மதி

நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு எதிரான ED-ன் குற்றப்பத்திரிக்கையை டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட் நிராகரித்துள்ளது. ED குற்றம்சாட்டுவது போல் இந்த பணமோசடி வழக்கு எந்த விசாரணை அமைப்பின் FIR அடிப்படையிலும் நடத்தாமல், தனியார் (சுப்ரமணியன் சுவாமி) அளித்த புகாரின் அடிப்படையிலானது என கூறி
வழக்கை விசாரிக்க கோர்ட் மறுத்துள்ளது. இதை குறிப்பிட்டு நீதி வென்றதாக காங்., தெரிவித்துள்ளது.
Similar News
News December 21, 2025
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை செய்வதற்கான பயிற்சி அளிக்கப்படவுள்ளதாக தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ப்ரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார். வருகிற 25ம் தேதி முதல் 28ம் தேதி வரை நான்கு நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சி வகுப்பிற்கு 500 ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள இளைஞர்கள், பெண்கள் 9489129765 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 21, 2025
காந்தி மீண்டும் கொல்லப்பட்டுள்ளார்: ப.சி.,

<<18603421>>100 நாள் வேலைவாய்ப்பு<<>> திட்டத்துக்கு வைக்கப்பட்டுள்ள பெயர், காந்தியின் பெயரை விட பொருத்தமானதா என ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். பெயரை நீக்கியதன் மூலம் 77 ஆண்டுகளுக்கு பின் காந்தி மீண்டும் கொல்லப்பட்டுள்ளதாக அவர் விமர்சித்துள்ளார். நேஷனல் ஹெரால்டு வழக்கில் ED சட்டவிரோத செயலில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்த அவர், பழிவாங்கும் நடவடிக்கையை மத்திய அரசு இத்தோடு நிறுத்திக்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.
News December 21, 2025
25 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் நெல்லையப்பர் வெள்ளித்தேர்!

வரும் ஜனவரியில் நெல்லையப்பர் கோவில் வெள்ளித்தேர் மீண்டும் ஓடும் என CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். நெல்லை அரசு விழாவில் பேசிய அவர், கலைஞர் வழியில் இக்கோவிலுக்கு ஏராளமான நலத்திட்டங்களை திராவிட மாடல் அரசு தொடர்ந்து வருகிறது. குறிப்பாக, 1991-ம் ஆண்டு நடந்த தீ விபத்தில் எரிந்த வெள்ளி தேர் மீண்டும் ஓடும் என நான் அறிவித்தேன். அதன்படி, வரும் ஜனவரியில் வெள்ளித்தேர் மீண்டும் ஓடும் என உறுதியளித்துள்ளார்.


