News March 6, 2026
நேற்றைய மேட்ச்சில் நடந்த 7 மேஜிக்!

T20I WC அரையிறுதி போட்டியில் இந்திய அணி இங்கிலாந்தை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. மேட்ச்சில் நிகழ்ந்த 7-ம் நம்பரின் மேஜிக்கை பலரும் கவனித்திருக்க மாட்டோம். உடனே ‘தோனி வந்தாரு.. அதானே’ என எண்ண வேண்டாம். வேறு சில சுவாரசிய விஷயங்கள் உள்ளன. அது என்ன என அறிய மேலே உள்ள போட்டோவை இடது புறமாக Swipe பண்ணுங்க. கண்டிப்பாக ஆச்சரியப்படுவீங்க. நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.
Similar News
News March 6, 2026
T20 அணியை வாங்கும் டிராவிட், அஸ்வின்

இந்திய முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்கள் டிராவிட் மற்றும் அஸ்வின் ஐரோப்பிய T20 பிரீமியர் லீக்கில் முதலீட்டாளர்களாக இணைய உள்ளனர். இருவரும் இந்திய முதலீட்டாளர்கள் குழு ஒன்றுடன் இணைந்து ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ அணியை வாங்கவுள்ளதாக பிபிசி ஸ்போர்ட் செய்தி வெளியிட்டுள்ளது. ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ள இந்த லீக்கில் அஸ்வின் வீரராகவும் களம் காண்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
News March 6, 2026
விவாகரத்து சர்ச்சை.. விஜய்க்கு தொடரும் சிக்கல்

விவாகரத்து சர்ச்சைக்கு நடுவே த்ரிஷாவுடன் விஜய் ஒன்றாக நிகழ்ச்சியில் கலந்து கொண்டது SM-ல் பேசுபொருளாகியுள்ளது. எதிர்க்கட்சிகளின் விமர்சனத்திற்கு விஜய் ஆளாகியுள்ள நிலையில், நேற்றிரவு முதல் அதிகளவில் மீம்ஸ்கள் வைரலாகி வருகின்றன. மேலும், தவெக தொண்டர்கள் பலரும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருவதையும் காண முடிகிறது. அதேநேரம், விஜய்க்கு <<19309273>>ஆதரவாகவும்<<>> குரல்கள் எழுந்துள்ளன. இது பற்றி உங்க கருத்து?
News March 6, 2026
130+ மணிநேரத்துக்கு மேலாக ஆப்லைனில் ஈரான்!

போர் தொடர்வதால் ஈரானில் 130+ மணி நேரத்திற்கும் மேலாக இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. ஈரானின் நெட்வொர்க் வேகம் 1% முதல் 5% வரை மட்டுமே உள்ளதாக இணைய கண்காணிப்பு குழுவான ‘நெட்பிளாக்ஸ்’ தெரிவித்துள்ளது. உள்நாட்டு தகவல்கள் கசிவதைத் தடுக்க பாதுகாப்பு காரணங்களுக்காக இணைய சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். உள்நாட்டு போராட்டத்தின் போதும் இதேபோன்று இணைய சேவை கட்டுப்படுத்தப்பட்டது.


