News January 12, 2026
நேந்திரம் பழத்தில் இவ்வளவு நன்மைகளா?

நேந்திர வாழைப்பழத்தில் பல்வேறு சத்துகள் நிறைந்துள்ளதால், வாரத்தில் 4 நாள்களாவது சாப்பிடுவது, பின்வரும் நன்மைகளை தருவதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். *செரிமான மண்டலத்தை சீராக்குகிறது *உடலுக்கு உடனடி ஆற்றலை வழங்குகிறது *ரத்த அழுத்தத்தை சீராக்கி, இதயத்தை பாதுகாக்கிறது *எலும்புகளை வலுப்படுத்துகிறது *நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது *சருமம் மற்றும் முடி ஆரோக்கியத்துக்கு நல்லது.
Similar News
News January 23, 2026
டப்பா இன்ஜின் தமிழ்நாட்டில் ஓடாது: CM ஸ்டாலின் பதிலடி

டபுள் இன்ஜின் அரசு நிச்சயம் தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வரும் என PM மோடி தெரிவித்ததற்கு, டப்பா இன்ஜின் தமிழ்நாட்டில் ஓடாது என CM ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். உ.பி., , மத்திய பிரதேசம், பிஹார் போன்ற உங்களின் ‘டபுள் இன்ஜின்’ மாநிலங்களை விட, TN, கேரளா, தெலங்கானா, கர்நாடகா, மே.வங்கம் என உங்கள் ‘டப்பா இன்ஜின்’ நுழையாத மாநிலங்கள்தான் வளர்ச்சியில் கொடிகட்டிப் பறப்பதாக சுட்டிக் காட்டியுள்ளார்.
News January 23, 2026
திருப்பரங்குன்றம் விவகாரத்தை கையில் எடுத்த PM மோடி

மதுராந்தகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் திமுகவை கடுமையாக விமர்சித்த PM மோடி, திருப்பரங்குன்றம் விவகாரத்தை பற்றியும் பேசினார். முருகப்பெருமானுக்கு விளக்குப் போடுவது விவாதப் பொருளான போது, நமது தலைவர்கள் பக்தர்களின் அதிகாரத்துக்காக குரல் கொடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார். தமிழ் கலாசாரம் பற்றி வெறும் வார்த்தைகளில் பேசவில்லை என்றும், அதை பாதுகாக்க உறுதிப்பாட்டுடன் பணியாற்றுவதாகவும் குறிப்பிட்டார்.
News January 23, 2026
TOSS: இந்திய அணி பவுலிங்

ராய்ப்பூரில் நடைபெறும் நியூசி.,க்கு எதிரான 2-வது டி20-யில் டாஸ் வென்ற இந்தியா, பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் அக்சர் பட்டேல், பும்ராவுக்கு பதில் ஹர்ஷித் ராணாவும், குல்தீப் யாதவும் இடம் பெற்றுள்ளனர். கடந்த டி20 போட்டியில் 48 ரன்களில் இந்தியா வெற்றி பெற்றிருந்தது. அதே உத்வேகத்துடன் இந்த போட்டியில் ஆதிக்கம் செலுத்த இந்தியா தயாராக உள்ளது.


