News November 19, 2024
நெல் பயிருக்கு காப்பீடு செய்ய தேதி நீட்டிப்பு
தேனி மாவட்டத்தில் கம்பம் பள்ளத்தாக்கு, பெரியகுளம், தேனி, வீரபாண்டி உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் ராபி சிறப்பு பருவத்தில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் பிரதமர் பயிர் காப்பீட்டு திட்டத்தில் காப்பீடு செய்ய நவ.15 கடைசி தேதி என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடைசி தேதி நவ.30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக வேளாண் துறையினர் தெரிவித்துள்ளனர்.
Similar News
News November 19, 2024
ரேஷன்கடை காலி பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு
தேனி மாவட்டத்தில் செயல்படும் பல்வேறு வகையான கூட்டுறவு சங்கங்களில் காலியாகவுள்ள 41 விற்பனையாளர் மற்றும் 08 கட்டுநர் பணியிடங்களை நிரப்புவதற்கு நேரடி தேர்வுகள் நடைபெற உள்ளது. இதில் பங்கு பெற தகுதியானவர்கள் https://drbtheni.net என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 04546-291 929 எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தேனி கூட்டுறவு இணை பதிவாளர் ஆரோக்கிய சுகுமார் தெரிவித்துள்ளார். *பகிரவும்*
News November 19, 2024
பெரியகுளம் அருகே பிரிட்ஜ் வெடித்து விபத்து
தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை பகுதியில் சுதந்திர வீதி தெருவை சேர்ந்த நாகேந்திரன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் நேற்று(நவ.18) இரவு பிரிட்ஜ் திடீரென வெடித்தது. இதில் வீட்டில் இருந்த அனைத்து பொருள்களும் தீயில் கருகி நாசமாயின. இத்தகவல் அறிந்த பெரியகுளம் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். மேலும் வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
News November 18, 2024
தேனி: இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்
தேனி மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் தேவையுள்ளவர்கள் அந்த அந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.