News February 25, 2025
நெல் கொள்முதல் செய்ய ஏற்பாடு – ஆட்சியர் தகவல்

தென்காசி மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் தென்காசி மாவட்டத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் வேளாண்மை துறை பரிந்துரைப்படி நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. தற்போது சுமார் 35 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் வரை கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. எனவே இதை விவசாயிகள் பயன்படுத்தலாம்.
Similar News
News September 29, 2025
தென்காசி: மீண்டும் ஒற்றை யானை வருகை!

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான செங்கோட்டை தாலுகா வடகரை பகுதியில் ஏராளமான விவசாய நிலங்கள் மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளன. தனியார் தோட்டங்களுக்குள் புகுந்து காட்டுயானைகள் அவ்வப்போது சேதப்படுத்தி வருகின்றன. இந்த நிலையில் ஒற்றை யானை ஒன்று நேற்று இரவு மீண்டும் தனியார் தோட்டங்களுக்குள் புகுந்து சேதப்படுத்திய யானையை வனத்துறையினர் காட்டுக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
News September 29, 2025
தென்காசி: பத்திரபதிவு கட்டணம் LIST!

நீங்க நிலம் அல்லது வீடு வாங்க போறீங்களா? பத்திரபதிவு செய்ய எவ்வளவு கட்டணம்ன்னு தெரியலையா? இதற்காக அலுவலரிடம் கேட்க வேண்டிய அவசியமில்லை. இங்கு <
News September 29, 2025
தென்காசி: ஹோட்டல்களில் தரமற்ற உணவுகள்

தென்காசி மாவட்டத்தில் விதிகளை மீறிய ஹோட்டல்கள் கடைகளிலும் இருந்து 10.49 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தென்காசி மாவட்டத்தில் 99 உணவகங்கள் குட்கா பொருட்கள் விற்பனை செய்த 38 கடைகள் தரமற்ற உணவு பொருட்கள் வழங்கிய கடைகள் ஆகியவற்றிற்கு உணவுத்துறை அதிகாரிகள் மூலம் 10 புள்ளி 49 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கபட்டது.