News March 2, 2026

நெல்லை: G Pay / PhonePe / Paytm பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

image

நெல்லை மக்களே, இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

Similar News

News March 4, 2026

நெல்லையில் சந்திர கிரகணத்தை பார்த்த மக்கள்

image

இன்று பிற்பகல் 3 மணி முதல் இரவு 7 மணியைத் தாண்டி சந்திர கிரகணம் நீடித்தது. இதை பார்வையிட நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. மாலை 6.30 மணி முதல் பொதுமக்கள் அறிவியல் மையத்தில் வைக்கப்பட்டிருந்த சிறப்பு கருவி மூலம் சந்திரன் தோற்றத்தை பார்த்து மகிழ்ந்தனர்.

News March 3, 2026

BREAKING: நாங்குநேரி இரட்டை கொலையில் அதிர்ச்சி தகவல்..!

image

நாங்குநேரியில் நேற்று இரவு இரண்டு பேர் கொலை செய்யபட்ட சம்பவம் தமிழகத்தை உலுக்கியது. அதில் 2023ம் ஆண்டு மாணவர் சின்ன துரையை தாக்கிய வழக்கில் கைதான சுபாஷ், கல்யாணி ஆகிய இருவர் தற்போது நாங்குநேரியில் இரட்டை கொலை சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். சின்னதுரையை தாக்கிய வழக்கில் கைதான 2 பேர் இந்த இரட்டை கொலை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர் என்னும் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது

News March 3, 2026

நெல்லை : சிலிண்டர் வாங்கும்போது இது முக்கியம்!

image

நெல்லை மக்களே, உணவு பொருளுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதேபோல், நீங்கள் சிலிண்டர் வாங்கும்போது உட்புறத்தில் A.26, B.26, C.26, D.26 (A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.
A – (Jan/Feb/Mar),
B – (Apr/May/Jun),
C – (Jul/Aug/Sep),
D – (Oct/Nov/Dec),
காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!