News August 27, 2025
நெல்லை: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

▶️முதலில் http://cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
▶️ பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
▶️ இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
▶️ பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்கள்
Similar News
News August 27, 2025
தூய்மை பணியாளர்கள் மனு மீது விரைந்து நடவடிக்கை – ஆட்சியர்

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளை நிவர்த்தி செய்ய குறைதீர் கூட்டம் நடைபெற்றது. ஆட்சியர் இரா.சுகுமார், பணியிட பாதுகாப்பு, சீருடை, ஊதியம் உறுதி செய்ய உத்தரவிட்டார். நான்கு பணியாளர்களுக்கு ரூ.59,000 மதிப்பில் இறப்பு, கல்வி, மகப்பேறு உதவித்தொகை வழங்கப்பட்டது. மாவட்ட வருவாய் அலுவலர், உதவி இயக்குநர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
News August 27, 2025
நெல்லை மாவட்டத்தில் 47,392 மாணவர்கள் பயன்

தமிழ்நாடு முதலமைச்சரால் தொடங்கப்பட்ட காலை உணவு திட்டத்தில், நெல்லை மாவட்டத்தில் 804 பள்ளிகளில் 34,277 குழந்தைகள் பயன்பெற்று வருகின்றனர். நேற்று 5-ம் கட்டமாக, நகர்ப்புற உள்ளாட்சிப் பகுதிகளில் உள்ள 210 அரசு உதவி பெறும் பள்ளிகளில் 13,115 மாணவர்களுக்கு இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது. மொத்தம் 1,014 பள்ளிகளில் 47,392 மாணவர்கள் இப்போது பயனாளிகளாக உள்ளனர்.
News August 27, 2025
பற்கள் பிடுங்கிய வழக்கு செப்.15ம் தேதிக்கு ஒத்திவைப்பு

அம்பாசமுத்திரம் காவல் நிலையங்களில் 2023ல் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கியதாக ஏ எஸ் பி பல்வீர் சிங் உள்பட 14 பேர் மீது சிபிசிஐடி 4 வழக்குகள் பதிவு செய்தது. திருநெல்வேலி குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் வழக்கை மனித உரிமை மீறலாகக் கருதி மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரினர். பல்வீர் சிங் உள்ளிட்டோர் ஆஜராகினர். வழக்கு செப்.15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது .