News June 4, 2024
நெல்லை: 974 வாக்குகள் செல்லாது என அறிவிப்பு

நெல்லை மக்களவைத் தொகுதியில் பதிவான தபால் வாக்குகளில், 974 வாக்குகள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 3000 தபால் வாக்குகளில், காங்கிரஸ் 913 வாக்குகளும், பாஜக 600 வாக்குகளும் பெற்றிருந்தன. இந்த நிலையில், கையெழுத்து சரியில்லை போன்ற பல்வேறு காரணங்களுக்காக 974 தபால் வாக்குகள் செல்லாது என வாக்கு எண்ணும் அலுவலர்கள் அறிவித்துள்ளனர்.
Similar News
News September 22, 2025
இது ‘முருங்கை’ சமாச்சாரம்!

ஆண்களின் பாலியல் செயல்பாட்டை `முருங்கை’ வலுப்படுத்துவதாக ஆய்வில் உறுதியாகியுள்ளது. முருங்கை விதை, இலைகளில் உள்ள குளூக்கோசினோலேட், பாலி பீனால்கள் மற்றும் சில வகை ஆன்டிஆக்சிடன்ட் சத்துகள் ஆணுறுப்பில் ரத்தவோட்டத்தை அதிகரிப்பதால் விறைப்புத்தன்மை குறைபாடு நீங்குகிறது, விந்தணுக்கள் சேதத்தை குறைப்பதால் மலட்டுத்தன்மை நீங்குகிறது. மேலும், புராஸ்டேட் சுரப்பி வீக்கம் மற்றும் புற்றுநோயையும் இது தடுக்கிறது.
News September 22, 2025
காயங்களை ஆற்றும் எச்சில்

உங்களின் வாய் சாப்பிட உதவும் உறுப்பு மட்டுமல்ல, அது நோய்களை குணப்படுத்தும் சிறந்த அமைப்பு என்கின்றனர் ஆய்வாளர்கள். வாயில் சுரக்கும் எச்சிலில் (உமிழ்நீர்) உள்ள ஹிஸ்டாடின்ஸ் போன்ற புரோட்டீன்கள், காயமடைந்த திசுக்களை விரைவாக குணப்படுத்துவதாகவும், ஆண்டி செப்டிக் மருந்துகளை விட சிறப்பாக செயல்படுவதாகவும் கண்டறிந்துள்ளனர். இதனால் தான், வாயில் ஏற்படும் புண்கள் ஆச்சரியமூட்டும் வேகத்தில் குணமடைகிறதாம்.
News September 21, 2025
நடிகை ராதிகா வீட்டில் பெரும் துயரம்.. கண்ணீர் அஞ்சலி

நடிகர் எம்.ஆர்.ராதாவின் மனைவியும் நடிகைகள் ராதிகா, நிரோஷாவின் தாயாருமான கீதா ராதா(86) இன்று சென்னையில் காலமானார். வயது மூப்பால் அவரது உயிர் பிரிந்ததாக மகள் ராதிகா தெரிவித்துள்ளார். அவரது உடல் போயஸ் கார்டன் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. சென்னை பெசன்ட் நகர் மின்மயானத்தில் நாளை(செப்.22) தகனம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.