News July 10, 2025
நெல்லை: 23 கொலைகள்; கதி கலங்கும் மக்கள்

நெல்லை மாவட்டத்தில், கடந்த சில மாதங்களாக கொலைச் சம்பவங்கள் மக்களிடையே பெரும் அச்சத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளன. இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூலை மாதம் வரையிலான காலகட்டத்தில் மட்டும், முன்விரோதம், சொத்துத் தகராறு, பணம் கொடுக்கல் வாங்கல் போன்ற காரணங்களுக்காக 22 கொலை வழக்குகளில் 23 உயிர்கள் பறிபோயுள்ளன. இந்த தொடர் கொலைச் சம்பவங்கள் நெல்லை மாவட்டத்தில் அமைதியற்ற சூழலை உருவாக்கியுள்ளன.
Similar News
News July 10, 2025
கூடங்குளம் அருகே மினி வேன் கவிழ்ந்து 20 பேர் காயம்

நெல்லை, கூடங்குளம் அருகே காமநேரியிலிருந்து கொத்தங்குளம் சென்ற மினி வேன், மாடு சாலையில் புகுந்ததால் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. விபத்தில் 20 பயணிகள் காயமடைந்தனர். உடனடியாக பொதுமக்கள் உதவியுடன் காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டனர். இந்த விபத்து காரணமாக போக்குவரத்து தற்காலிகமாக பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து கூடங்குளம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
News July 10, 2025
படகில் தவெக விளம்பரம்; கூட்டப்புளி விவகாரத்தில் திடீர் திருப்பம்

நெல்லை கூட்டப்புளியில் தமிழக வெற்றிக் கழக கட்சி பெயர் இருந்த நாட்டுப் படகுகளின் உரிமையாளர்களுக்கு மானிய மண்ணெண்ணெய் வழங்க அதிகாரிகள் மறுத்ததாக கூறப்படுகிறது. தவெக பெயரை நீக்கினால் தான் மண்ணெண்ணை வழங்கப்படும் என கூறியதால் மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தவெக தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்ட நிலையில் அதிகாரிகள் வருத்தம் தெரிவித்து மண்ணெண்ணெய் வழங்கியதாக இன்று தகவல் வெளியாகியுள்ளது.
News July 10, 2025
நெல்லை: ஆசிரியர் வேலை வேண்டுமா?

தமிழகத்தில் காலியாக உள்ள 1996 ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு இன்று (ஜூலை.10) முதல் ஆகஸ்ட்12ம் தேதி வரை இங்கு <